மார்க்கெட் போன நடிகைகள் தான் சீரியல்களில் நடிப்பார்கள் என்பது எல்லாம் பழைய கதை. தற்போது சீரியல் நடிகைகளுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. ஏன் சில நடிகைகள் சின்னத்திரையில் கிடைத்த பிரபலத்தை வைத்து வெள்ளித்திரையிலும் கால் பாதித்து வெற்றிக்கொடி ஏற்றுகின்றனர்.

அப்படி விமான பணிப்பெண்ணாக இருந்து மாடலிங்கில் நுழைந்து சின்னத்திரையில் ஊடுருவி, வெள்ளித்திரையில் நுழைந்தவர் தான் நம்ம வாணிபோஜன். ரசிகர்கள் இவரை சின்னத்திரை நயன்தாரா என அன்புடன் அழைக்கின்றனர். 

சன் டி.வி.யில் வெளியான தெய்வ மகள் சீரியலில் சத்யவாக மக்கள் மனதை கொள்ளை கொண்ட வாணி போஜன், தெலுக்கில் "மீக்கு மாத்ரமே செப்தா" என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையிலும் அறிமுகமாகிவிட்டார். தற்போது "ஓ மை கடவுளே" என்ற தமிழ் படத்திலும் நடித்துள்ளார். 


அழகில் மட்டுமல்லா, அசத்திய நடிப்பாலும் ரசிகர்களை கட்டிப்போட்டுள்ள வாணி போஜன், சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டிவாக உள்ளார்.  அவ்வப்போது தனது ஹாட் அண்ட் க்யூட் புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கங்களில் பதிவேற்றி ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். 

தற்போது படுக்கையறையில் வாணிபோஜன் நடத்தியுள்ள போட்டோ ஷூட் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது.  பிங்க் நிற கோட், அதே நிறத்தில் பேண்ட், கறுப்பு நிற டாப் சகிதமாக வாணிபோஜன் கிளு, கிளு புகைப்படங்கள் லைக்குகளை குவித்து வருகிறது.