வருங்கால கணவருடன் சுற்றுலா சென்ற போது நேர்ந்த விபத்து..! பிரபல நடிகை கார் விபத்தில் மரணம்..!

பிரபல சீரியல் நடிகை, ஒருவர் தன்னுடைய வருங்கால கணவருடன், காரில் சுற்றுலா சென்ற போது எதிர்பாராத விதமாக நடந்த விபத்தில்... அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 

serial actress vaibhavi upadhyaya death in car accident

நேற்றைய தினம், பெங்காலி நடிகை ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்த நிலையில், இதைத்தொடர்ந்து மற்றொரு நடிகையும் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். திரைப்பட நடிகர்களுக்கு கொடுக்கும் வரவேற்பை,  சமீப காலமாகவே சீரியல் நடிகர் நடிகைகளுக்கும் கொடுத்து வருகின்றனர் ரசிகர்கள். அந்த வகையில் பாலிவுட் திரை உலகில், 'சாராபாய் சாராபாய்' என்ற சீரியல் மூலம் அறிமுகமான நடிகை வைபவி உபாத்தியாயாவிற்கு பல ரசிகர்கள் உள்ளனர்.

serial actress vaibhavi upadhyaya death in car accident

பைக் ரேஸ் இடையில்... சமையல் கலையையும் அவிழ்த்து விட்ட அஜித்! வைரலாகும் புகைப்படம்!

இந்த சீரியலில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, வைபவி அடுத்தடுத்து பல சீரியல்களில் நடித்து பிரபலமானார். தற்போதும் ஒரு சில பாலிவுட் சீரியல்களில் நடித்து வருவது மட்டுமின்றி, சில திரைப்படங்களிலும் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இமாச்சல பிரதேசத்திற்கு தன்னுடைய வருங்கால கணவருடன் சுற்றுலா செல்ல முடிவெடுத்த வைபவி, கடந்த சில தினங்களாக இமாச்சலப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளுக்கு தன்னுடைய பியான்சியுடன் விசித்தடித்து வந்தார்.

இந்நிலையில் இவர்கள் சென்ற கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஒரு பெரிய பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் வைபவி பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  மேலும்  இவருடைய வருங்கால கணவர் நிலை குறித்து தற்போது வரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை என்றாலும், அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

serial actress vaibhavi upadhyaya death in car accident

‘ஏன் இவ்ளோ சீக்கிரம் என்ன விட்டு போன’ திடீரென மரணமடைந்த அம்மா... குக் வித் கோமாளி பவித்ரா போட்ட எமோஷனல் பதிவு

இந்த சம்பவம் பாலிவுட் சீரியல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து வைபவி  மறைவுக்கு பலர்  தங்களுடைய இரங்கல்களை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வருகின்றனர். அதே போல்  இவருடைய இறுதிச் சடங்குகள், மும்பையில் உள்ள அவருடைய வீட்டில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios