பில்லி - சூனியம் மூலம் பாலிவுட் நடிகையாக மாற்றுகிறேன் என, காதல் வலையில் நடிகையை சிக்க வைத்து அவருடைய பணத்தை பறித்து கொண்டு, தற்கொலைக்கு தூண்டிய, காதலரை தற்போது போலீசார் கைது செய்து, விசாரணை செய்து வருகிறார்கள். 

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரைச் சேர்ந்தவர் சீரியல் 25 வயது ஆகும் சேஜல் சர்மா. சிறு வயதில் இருந்தே நடிப்பு மீது தீவிர ஆசை கொண்ட இவர்,  மும்பைக்கு வந்து சில சீரியல்களில் நடிக்க வாய்ப்பு தேடினார். இவர் நினைத்தது போலவே,  சின்னத்திரை தொடர்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தோ ஹாப்பி ஹை ஜி என்ற இந்தி தொடர் வடஇந்திய மக்களின் பெரும் வரவேற்பை பெற்றதால் வெகு விரைவில் பிரபலமானார்.

 ஆஸாத் பரிந்தே என்ற வெப் சீரிஸில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார். இந்நிலையில் இவர் திடீர் என ஜனவரி மாதம் 24 ஆம் தேதி திடீரென தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தன்னுடைய தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என்று எழுதி வைத்து விட்டு, சேஜல் சர்மா செய்து கொண்டதால், மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்பட்டது.

இந்நிலையில் சேஜல் சர்மா தாயார் தன்னுடைய மகள் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் செய்தார். மேலும் மகளின் செல்போனை கொடுத்து இதிலிருந்து, அவர் தற்கொலை சம்மந்தமாக ஆதாரம் உள்ளதா என்பதையும் விசாரிக்க கூறியுள்ளார்.

நடிகை சேஜலின் செல்போன் ஆய்வு செய்த போலீசார், தற்கொலை செய்து கொண்ட அன்று, டெல்லியைச் சேர்ந்த மாடல் மற்றும் ஜிம் பயிற்சியாளர் ஆதித்யா வசிஷ்ட் என்பவருக்கு மட்டும் தொடர்ந்து போனில் பேசியுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. நடிகை சேஜல் சர்மாவை பாலிவுட் பட நாயகியாக மாறுகிறேன் என கூறி, தன்னுடைய காதல் வலையில் வீழ்த்தி, பில்லி சூனியம், வசியம் போன்ற மாந்திரீக வேலைகள் மூலம் பிரபலமாக்குகிறேன் என  பல லட்சம் பணம் வாங்கியுள்ளார்.

ஒரு நிலையில், சேஜல் சர்மாவிற்கு பணம் பறிப்பதற்காக தான், இந்த காதல் நாடகம் நடந்ததும் தெரியவந்துள்ளது. இதனால், ஜனவரி 24ஆம் தேதி ஆதித்யாவிடம் கடுமையாக சண்டை போட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையிலான காதல் முறிந்துள்ளது. இதை அடுத்து மன உளைச்சலுக்கு ஆளான சேஜல் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து நடிகை சேஜலிடம் பிரபலமாக்குவதாகக்கூறி பில்லி சூனியம் என பணம் பறித்து மோசடியில் ஈடுபட்டு, தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து ஆதித்யாவை கைது செய்தனர்.