பிக் பாஸ் வீட்டில் இருந்த போது மும்தாஜின் நேர்மறையான பேச்சும் செயல்களும் பலருக்கும் பிடித்திருந்தாலும், அவர் முகத்தில் அடிப்பது போல சில நேரங்களில் பேசுவது அவரது ரசிகர்களுக்கே கோபத்தி கிளப்பி இருக்கிறது. அதிலும் பிக் பாஸ் வீட்டில் இருந்த போது மும்தாஜ் எப்போதும் தன்னை சிறப்பாகவே கவனித்து கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார். தனக்கென ஸ்பெஷலான பால் ,என எல்லாவற்றிலுமே விட்டுக்கொடுக்காமல் இருந்தார். 

மேலும் டாஸ்க் செய்யும் போது கூட தன் உடல் நிலையை தான் அதிகம் காரணம்காட்டுவார். அப்படி என்ன தான் அவருக்கு என போட்டியாளர்கள் கூட அவர் மீது கோபப்பட்டிருக்கின்றனர். அந்த கேள்விக்கு சரவணன் மீனாட்சி சீரியல் புகழ் ஸ்ரீஜா சமீபத்தில் பதிலளித்திருக்கிறார். 

அதில் மும்தாஜை யாரும் திட்டாதீர்கள். அவருக்கு இருக்கும் பிரச்சனை உண்மையானது தான். இதனை ருமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ் என்று சொல்வார்கள். என் அம்மாவிற்கும் இதே பிரச்சனை உண்டு. இந்த பிரச்சனை இருந்தால் பால் பொருள்கள் உட்கொள்ளும் போது மும்தாஜ் போலவே கவனமாக தான் செயல்பட வேண்டும். அதே போல இந்த பிரச்சனை இருந்தால் படுக்கையில் இருந்து எழுந்ததும் உடல் விரைப்பாக இருக்கும். சிறிது நேரம் கழித்து தான் சரிவர நடமாட முடியும். சில குறிப்பிட்ட கெமிக்கல்கள் ஒத்துக்கொள்ளாது. அதனால் தான் மும்தாஜ் முடியை கலர் செய்ய மறுத்திருக்கிறார்.

அது மட்டுமில்லாமல் இந்த பிரச்சனை இருப்பவர்கள் தண்ணீரில் அதிக நேரம் நிற்க கூடாது. கண்ணாடி பொருள்களை கையாளும் போது தடுமாற்றம் ஏற்படும். மும்தாஜை பிக் பாஸ் ரசிகரகள் திட்டும் போதெல்லாம் எனக்கு என் அம்மாவின் நினைவு தான் வரும். அவர் பாவம் மும்தாஜ் சொன்னது எல்லாம் உண்மைதான் மிகைப்படுத்துதல் அல்ல. என மும்தாஜுக்காக பரிதாபப்பட்டிருக்கிறார் ஸ்ரீஜா.