ஆனால் ஸ்ரவாணி தற்கொலை வழக்கில் முன்னாள் காதலர்களான சாய் கிருஷ்ணா ரெட்டி, தயாரிப்பாளர் அசோக் ரெட்டி ஆகியோர் மீதும் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இவர்களும் வெவ்வேறு காலக்கட்டத்தில் ஸ்ரவாணியை காதலித்துள்ளனர். 

மனசு மம்தா என்ற சீரியலில் மூலம் பிரபலமானவர் தெலுங்கு சீரியல் நடிகை ஸ்ரவாணி. ஐதராபாத்தின் எசார் நகர் பி.எஸ்.யில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் இரண்டாவது மாடியில் வசித்து வந்த ஸ்ரவாணி, கடந்த 8ம் தேதி இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் நடிகை தற்கொலைக்கு காரணம் டிக்டாக் பிரபலமான தேவராஜ்தான் என நடிகையின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் பல திடீர் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஸ்ரவாணிக்கும், தேவராஜ்க்கும் இடையே டிக்-டாக் மூலம் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இருவரும் டிக்-டாக்கில் ஒன்றாக சேர்ந்து காதல் பாடல்களுக்கு டூயட் பாடியுள்ளனர். டிக்-டாக்கில் அறிமுகமான நட்பு காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இருவரும் பல சமயங்களில் தனிமையில் சந்தித்து கொண்டதாக கூறப்படுகிறது. இடையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட, வீடியோக்கள் மற்றும் போட்டோவை வைத்து ஸ்ரவாணியிடம் பணம் பறிக்க முயன்றதாகவும், அதனால் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது.

ஆனால் ஸ்ரவாணி தற்கொலை வழக்கில் முன்னாள் காதலர்களான சாய் கிருஷ்ணா ரெட்டி, தயாரிப்பாளர் அசோக் ரெட்டி ஆகியோர் மீதும் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இவர்களும் வெவ்வேறு காலக்கட்டத்தில் ஸ்ரவாணியை காதலித்துள்ளனர். திருமணம் செய்து கொள்வதாக பல வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இதில் அசோக் ரெட்டியை தவிர மற்ற இரண்டு பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அசோக் ரெட்டி தலைமறைவாக இருக்கிறார். தயாரிப்பாளர் அசோக் ரெட்டியை தனிப்படை தேடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.