serial actress priya bavani acting movie

பிரபல தனியார் தொலைக்காட்சியில், செய்தி வாசிப்பாளராக அறிமுகம் ஆகி, காதல் முதல் கல்யாணம் வரை சீரியலில் நடிக்க தொடங்கியவர் பிரியா பவானி.

இவர் நடித்து வந்த சீரியலுக்கு, இல்லத்தரசிகள் மட்டும் இல்லாமல் பல இளைஞர்களும் ரசிகர்களாக இருந்தனர்.

சமீபத்தில் இந்த சீரியலை விட்டு விலகிய பிரியா, திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆவர் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அமெரிக்க சென்று நடிப்பு சம்பந்தமான படிப்பை படித்து விட்டு வந்துள்ளார்.

தற்போது, சின்னத்திரைக்கு முழுக்கு போட்டுவிட்டு, வெள்ளித்திரைக்குள் என்ட்ரி ஆகிறாராம் கதாநாயகியாக. இந்த படத்தை பற்றிய மற்ற தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.