கடந்த 2016 ஆம் ஆண்டு, பிரபல சீரியல் நடிகர் ஈஸ்வர் பெற்றோர் சம்மதத்துடன் 'வம்சம்' சீரியலில் ரோஜா என்கிற கதாபாத்திரத்தில் நடித்த ஜெயஸ்ரீ என்பவரை திருமணம் செய்து கொண்டார். இது நடிகர் ஈஸ்வருக்கு முதல் திருமணமாக இருந்தாலும், ஜெயஸ்ரீக்கு இரண்டாவது திருமணம்.

இவர்கள் இருவரும் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தவர்கள். இந்நிலையில் கடந்த ஓரிரு தினத்திற்கு முன், ஈஸ்வரின் மனைவி ஜெயஸ்ரீ வடபழனி காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்தார்.

அதில், தன்னுடைய கணவர் ஈஸ்வர், தொகுப்பாளினியும், சீரியல் நடிகையுமான மகாலட்சுமியுடன் தவறான தொடர்பு வைத்திருப்பதாகவும், இதுகுறித்து கேட்டபோது, அம்மாவுடன் சேர்ந்து தன்னை தாக்கியதாக கூறி அதற்கான அனைத்து ஆதாரங்களையும் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஈஸ்வர் மற்றும் அவருடைய தாயார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

சின்னத்திரையில் காட்டு தீ போல் பற்றி எரியும் இந்த விஷயம் குறித்து ஈஸ்வரின் மனைவி ஜெயஸ்ரீ கொடுத்துள்ள பேட்டியில் பல்வேறு தகவல்களை கூறி அதிர வைத்துள்ளார்.

தன்னை திருமணம் செய்து கொள்ளும் போது. ஈஸ்வருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. இந்த காலத்தில் அனைவருக்குமே உள்ள ஒரு சாதாரண பழக்கம் என இதை நான் பெரிதாக கண்டு கொள்ள வில்லை. ஆனால், இது நாளுக்கு நாள் அதிகரித்தது. 

பல முறை அதீத குடியில், ஈஸ்வர் நடு வீட்டிலேயே சிறுநீர் கழித்துள்ளார், இதனை அவருடைய அம்மா மற்றும் நான் என இருவருமே சுத்தம் செய்துள்ளோம். இதனால் நான் அவர் மீது கோவம் கொண்டால், குடி தெளிந்ததும் நீ இப்படி இருந்தால் எனக்கு ஒத்து வராது என சண்டை போடுவார்.

மேலும் ஒரு முறை குடித்து விட்டு, நான் என நினைத்து குழந்தையிடம் கூட தவறாக நடந்து கொண்டார் என அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் ஜெயஸ்ரீ.