serial actress husbands death
முன்பெல்லாம் தொடர்ந்து சீரியல் நடிகைகள் காதல் தோல்வி, மனஉளைச்சல் போன்ற சம்பவங்களால் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.
ஆனால் தற்போது அந்த நிலை முற்றிலும் மாறி, சீரியல் ஹீரோயினிகளின் கணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலை வந்துள்ளது.
சமீபத்தில் தான் பிரபல சின்னத்திரை நடிகை நந்தினியின் கணவர் கார்த்தி, தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் அரங்கேரி ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் தற்போது ரெட்டைவால் குருவி, இஎம்ஐ போன்ற சீரியல்களில் நடித்த நடிகை பவானி ரெட்டியின் கணவரும், சீரியல் நடிகருமான பிரதீப் ஹைதராபாத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இவர் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் 'சுமங்கலி' என்ற சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறர் என்பது குறிப்பிடத்தக்கது.
கணவர் பிரதீப்பின் தற்கொலை குறித்து கூறியுள்ள பவானி ரெட்டி, தங்களுக்குள் பெரிதாக எந்த ஒரு பிரச்னையும் இல்லை என்றும், இரவு முழுவதும் அவர் குடித்துக்கொண்டு இருந்ததால் நான் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அதிகாலையிலேயே ஷூட்டிங் சென்றுவிட்டேன்.
நான் வந்து பார்த்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார், அணைத்து விஷயங்களிலும் மன தைரியத்துடன் அணுகும் இவர் ஏன் இப்படி செய்துகொண்டார் என தெரியவில்லை என கதறியபடி கூறியுள்ளார் பவானி.
கணவர்கள் உயிருடன் இருக்கும் போது கண்டுகொள்ளாமல், ஷூட்டிங் , மேக்கப், என ஆடம்பரங்கள் மீது ஆர்வம் காட்டும் இந்த நடிகைகள் அவர்கள் இறந்ததும் இப்படி அழுது புலம்பி வருகின்றனர்.
