சீரியல் நடிகை ஹரிப்ரியா, பல சீரியல்களில் நடித்து மிகவும் பிரபலமானவர். தற்போது 'கண்மணி' சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'கண்மணி' சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவருக்கும் பிரபல தொகுப்பாளர் அசார் என்பவருக்கும், ஏற்பட்ட பழக்கமே இவரின் விவாகரத்திற்கு காரணம் என ஒரு தகவல், காட்டு தீயாய் பற்றி எரிய, இன்ஸ்டாகிராம் பக்கத்தில், உண்மையை கூறி விளக்கம் கொடுத்துள்ளார்.

நடிகை ஹரிப்ரியா, கனாகாணும் காலங்கள் சீரியல் மூலம் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்தவர். இதை தொடர்ந்து லட்சுமி வந்தாச்சு, பிரியமானவள் என சின்னத்திரை ரசிகர்கள் மனதில் நீங்காத இடம்பிடித்த பல சீரியல்களில் நடித்துள்ளார்.

இவர் 2012 ஆம் ஆண்டு, பிரபல சீரியல் நடிகர் விக்னேஷ் குமாரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ள நிலையில், இருவருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

மேலும் இவர்கள் பிரிவிற்கு முக்கிய காரணம் பிரபல தொகுப்பாளர் தான் என கூறி, ஹரிப்ரியா அவருடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வட்டமிட்டது. தொகுப்பாளர் அசாத்தை தான் ஹரிப்ரியா இரண்டாவது திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் கிசுகிசுக்கள் எழுந்தனர்.

இந்த தகவலை மறுத்துள்ள ஹரிப்ரியா, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதற்கு முற்று புள்ளி வைத்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, "எங்களுக்கு எந்த ஜாதி, மதம், எதிர்பார்ப்பு என எதுவும் இல்லை.  ஒரு பெண்ணின் வெற்றிக்கு காரணமாக ஒரு ஆண் இருப்பான். அவர் என் காதலனோ, கணவரோ கிடையாது... பின் எப்படி அவர் என்னுடைய ஆத்மாத்தமான நபராக இருக்க முடியும்.

அதே போல் அந்த மனிதர், என்னுடைய பாய் பிரென்ட் கிடையாது, காதலர் கிடையாது, என் வாழ்க்கைத்துணையும் இல்லை. மகிழ்ச்சியாக பேசுவதை என்னுடைய பிறப்புரிமை, தவறு என்னுடையது இல்லை. பார்ப்பவர்களிடம் தான் உள்ளது. இதை நல்லமனத்தோடு பார்த்தல் தவறாக தெரியாது என்பது போல் கூறி இந்த வதந்திக்கு முற்று புள்ளி வைத்துள்ளார் ஹரிப்பிரியா.