சீரியல் நடிகைகள் பலரும் தற்போது ஷூட்டிங் இல்லாததால் சோசியல் மீடியா பக்கம் கவனம் செலுத்தி வருகின்றனர். இன்ஸ்டாகிராம், ட்விட்டர் பக்கத்தில் ஹாட் போட்டோஸை பதிவிடுவதோடு, சைக்கிள் கேப்பில் வெள்ளித்திரையில் கால் பாதிக்கவும் முயற்சித்து வருகின்றனர். பகல்நிலவு, கடைக்குட்டி சிங்கம் ஆகிய சீரியல்களில் பாவாடை தாவணி, சேலை கட்டி நடித்த ஷிவானி... சமீப காலமாக உச்ச கட்ட கவர்ச்சியில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 

சின்னத்திரை நடிகைகளில் இளம் வயதிலேயே நடிக்க வந்துவிட்ட ஷிவானி, சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வருகிறார். சீரியல் மூலம், ரசிகர்கள் மனதில் அழுத்தமான இடத்தை பிடித்து விட்ட ஷிவானியின் அடுத்த டார்கெட் வெள்ளி திரை தான்.வெள்ளித்திரை பயணத்தை துவங்கும் முன்பே... கவர்ச்சி உடையில் அசால்டாக போஸ் கொடுத்து வருகிறார். ரசிகர்களும் இவருடைய அழகு புகைப்படங்களை ஆராதித்து வருகிறார்கள்.

 

இதையும் படிங்க: காதலர் விக்னேஷ் சிவனின் பிறந்த நாளுக்காக லட்சங்களை செலவழித்த நயன்... எவ்வளவு தெரியுமா?

ஷிவானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுகிளாமராக பதிவிடும் புகைப்படங்கள் அனைத்தும் லைக்குகளை வாரிக்குவிக்கின்றனர். அத்தோடு பாடல்களுக்கு நடனமாடும் வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். தற்போது பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள ஷிவானி நாராயணன் அதற்காக சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

 

இதையும் படிங்க: படுமோசமான உடையில் பயங்கர கவர்ச்சி காட்டிய பூனம் பஜ்வா... மிரண்டு போன ரசிகர்கள்...!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள போட்டியாளர்கள் பலரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அந்த ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நான்கு சுவர்களுக்கு நடுவே அடைக்கப்பட்டாலும் ஷிவானியின் கவர்ச்சி மட்டும் குறையவில்லை. அங்கிருந்த படியும் குட்டை உடையில் குதூகலமாக போட்டோஸ்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் சூர்யா நடிப்பில் விரைவில் ஓடிடி-யில் வெளியாக உள்ள சூரரைப் போற்று படத்தில் இடம் பெற்ற காட்டுப்பயலே பாடலுக்கு இடுப்பை வளைத்து நெளித்து இஷ்டத்துக்கு ஆட்டம் போட்டிருக்கிறார். இதோ அந்த வீடியோ... 

View this post on Instagram

Kaatu Payale ❤️

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on Sep 28, 2020 at 10:00pm PDT