Asianet News TamilAsianet News Tamil

சின்னத்திரை நடிகர் சங்கத்தில் வெடித்தது சர்ச்சை... காவல் ஆணையரிடம் சீரியல் நடிகர்கள் புகார்...!

இதற்கு முன்னதாக 2019ம் ஆண்டு மலேசியாவிற்கு சின்னத்திரை நடிகர்கள் சங்கம் சார்பில் கலைநிகழ்ச்சிக்கு சென்ற போது, ஸ்பான்சர்களிடம் இருந்து யாருக்கும் தெரியாமல் ரவிவர்மா 5 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார். 

Serial actors complaint against association leader Ravi varma
Author
Chennai, First Published Jan 20, 2021, 7:59 PM IST

கொரோனா லாக்டவுனால் கடும் முடக்கத்தை சந்தித்து வந்த சின்னத்திரை நடிகர், நடிகைகள் தற்போது தான் இயல்பான நிலைக்கு மாறியுள்ளனர். ஓட்டுமொத்த திரையுலகமே இப்போது தான் நிம்மதி பெருமூச்சு விட்டு வருகிறது. இந்நிலையில், 
சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த ரவி வர்மா சங்கத்தின் வங்கி கனக்கில் இருந்த பணத்தை மோசடி செய்ததாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Serial actors complaint against association leader Ravi varma

கடந்த 13ம் தேதி சின்னத்திரை சங்கத்தின் கணக்கு இருக்கும் விருகம்பாக்கம் கனரா வங்கியில் இருந்து 80 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுச்செய்தி வந்ததை அடுத்து, நிர்வாகிகள் வங்கிக்கு சென்று விசாரித்துள்ளனர். அந்த பணத்தை ரவிவர்மா தான் எடுத்துச் சென்றது தெரியவந்தது. சின்னத்திரை நடிகர் சங்கத்தில் மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து ரவிவர்மா தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக நடிகர் மனோபாலா பதவியேற்ற போதும், அது செல்லாது என ரவிவர்மா தெரிவித்து குறிப்பிடத்தக்கது.

Serial actors complaint against association leader Ravi varma 

இதற்கு முன்னதாக 2019ம் ஆண்டு மலேசியாவிற்கு சின்னத்திரை நடிகர்கள் சங்கம் சார்பில் கலைநிகழ்ச்சிக்கு சென்ற போது, ஸ்பான்சர்களிடம் இருந்து யாருக்கும் தெரியாமல் ரவிவர்மா 5 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார். தற்போது மீண்டும் மோசடியில் இறங்கியுள்ளதால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை காவல் ஆணையரிடம் சீரியல் நடிகர்கள் புகார் மனு அளித்துள்ளனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios