தன்னுடைய மனைவிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய நபரை, பிரபல ஹிந்தி சீரியல் நடிகர் கரண் படேல், மிகவும் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டியுள்ளார். இதற்கு பலரும் நடிகரை புகழ்ந்து வருகிறார்கள்.

பொதுவாக பிரபலங்கள் என்றாலே அவர்களை சுற்றி எப்போதும் சில பிரச்சனைகள் இருந்து கொண்டே தான் இருக்கும். அதனை அவர்கள் பெரிதாக கண்டு கொள்வதும் இல்லை.

ஆனால் ஒரு சிலர் பிரபலங்களை மட்டுமின்றி, அவர்களுடைய குடும்பத்தை சேர்ந்தவர்களையும்,  தொடர்ந்து விமர்சித்து வரும்  சம்பவங்களும் அரங்கேறுகிறது.  இந்நிலையில் பிரபல ஹிந்தி சீரியல் நடிகர் கரண் படேலின் மனைவிக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒருவர் ஆபாச மெசேஜ்களை அனுப்பி உள்ளார்.

இதனை கண்டதும் கடுப்பாகிய நடிகர், அவரை எச்சரிக்கும் விதத்தில் பதிலடி கொடுத்துள்ளார். குறிப்பாக காது கூசும் அளவிற்கு மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி தன்னுடைய மனைவிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி நபரை இவர் திட்டி உள்ளார். இவரின் செயல் சரி என ரசிகர்கள் பலர் இவருக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

பிரபலம் என்கிற போர்வைக்குள் இருந்து கொண்டு, இதுபோன்ற மெஜ்களை கண்டும் காணாமல் இருக்காமல், கரண் படேல் நேரடியாக பதிலடி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram

😡 W A R N I N G 😡

A post shared by Karan Patel (@karan9198) on Jun 26, 2019 at 4:58am PDT