serial actor expressed his willing to participate in big boss 2
பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஆண்டு விஜய் டிவியின் டிஆர்பி-ஐ, உச்சத்துக்கே கொண்டு சென்ற ஒரு ரியாலிட்டி ஷோ. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்களில் பெரும்பாலானோர், தங்களுக்கு என சமுதாயத்தில் இருந்த பெயரை கெடுத்து கொண்டனர் என்பது தான் உண்மை. ஓவியா மற்றும் பரணி போன்றோர் தங்களின் யதார்த்தமான குணத்தால் புகழின் உச்சியை அடைந்ததும் குறிப்பிடத்தக்கது.
தற்போது பிக் பாஸ் சீசன் 2 மீண்டும் திரைக்கு வரவிருக்கிறது. முன்பு போலவே இம்முறையும் கமல் தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகிறார், என்பது முதல் பிரமோவின் மூலம் தெரிந்துவிட்டது.
ஆனால் இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்துகொள்ளப்போகும் பலி ஆடுகள் யார்? யார்? என்ற தகவல் மட்டும் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் பிரபலமடைந்த, நடிகர் அமித் பார்கவ் பிக் பாஸ் சீசன் 2-ல் கலந்து கொள்ள என்னை அழைத்தால், கண்டிப்பாக நான் கலந்து கொள்வேன். என கூறியிருக்கிறார்.
பிக் பாஸ் பேரை கேட்டாலே ஓடி ஒளியும் பிரபலங்களுக்கு மத்தியில், இந்த பச்ச மண்ணு தானா வந்து தலையக்குடுக்குதே….. என அவரின் ரசிகர்கள் இப்போதே புலம்ப தொடங்கிவிட்டனர்
