நடிகை ஒருவருடன் தகாத தொடர்பில் இருந்து கொண்டு, தன்னுடைய கணவரும் நடிகருமான ஈஸ்வர்,  தன்னையும் மகளையும், அடித்து கொடுமைப்படுத்துவதாக நடிகை ஜெயஸ்ரீ கொடுத்த புகாரில், ஈஸ்வர் மற்றும் அவருடைய அம்மாவை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்துள்ள சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் 'கல்யாணபரிசு' சீரியலில் நாயகனாகவும், 'ஆபீஸ்', 'கல்யாணம் முதல் காதல் வரை',  உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் சீரியல் நடிகர் ஈஸ்வர் ரகுநாதன். 

இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு, ஏற்கனவே கணவரிடமிருந்து விவாகரத்து பெற்று, தன்னுடைய மகளுடன் வாழ்ந்து வந்த சீரியல் நடிகை ஜெயஸ்ரீயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் பல்வேறு நிகழ்ச்சிகளில், தம்பதிகளாக கலந்துகொண்டு அன்பாக வாழ்ந்துவந்தனர். 

இந்நிலையில் ஜெயஸ்ரீ , வடபழனி காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்து அதிர வைத்துள்ளார். இந்த புகாரில்... கடந்த சில நாட்களாகவே கணவர் ஈஸ்வர் தன்னையும், தன்னுடைய மகளையும் அடித்து துன்புறுத்தி வருவதாகவும், கணவருடன் சேர்ந்து தன்னுடைய மாமியாரும் தங்களை கொடுமைப்படுத்துவதாக கூறினார்.

மேலும் தற்போது தான், கணவர் ஏன், இப்படி நடந்து கொள்கிறார் என்பதற்கான காரணம் தெரிய வந்ததாகவும் அது குறித்த ஆதாரங்களையும் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்.

சீரியல் நடிகர் ஈஸ்வருக்கு,  சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகி, தற்போது பல சீரியல்களில் நடித்து வரும் நடிகை மகாலட்சுமிக்கும் தவறான தொடர்பு உள்ளதாகவும், இதனால் தன்னையும் , தன்னுடைய மகளையும் சேர்த்து மாமியார் மற்றும் கணவர் கொடுமை படுத்துவதாக கூறியுள்ளார்.

ஜெயஸ்ரீ கொடுத்த புகாரின் அடிப்படையில்,  மனைவியை அடித்துத் துன்புறுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து போலீசார் ஈஸ்வர் மற்றும் அவரது தாயாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.  இதுவரை மகாலட்சுமி இது குறித்து எந்த ஒரு தகவலையும் வெளியிடாமல் அமைதி காத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.