வெள்ளித்திரை நட்சத்திரங்களுக்கு நிகராக பார்க்கப்படுகிறார்கள் சின்னத்திரை நடிகர்கள். அதனால் அவர்களை பற்றிய எந்த ஒரு தகவல் வெளியானாலும் அது காட்டு தீ போல் பரவி விடுகிறது.

குறிப்பாக, காதல், திருமணம், போன்ற செய்திகளை ஆர்வமுடன் தெரிந்து கொண்டு பிரபலங்களுக்கு ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் நேரடியாகவே தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர் ரசிகர்கள்.

இந்நிலையில், விஜய் டிவி தொலைக்காட்சியில் தொகுப்பாளினி ஜாக்குலின் நாயகியாக நடித்து வரும் சீரியல் 'தேன்மொழி'. இதில் ஜாக்குலினுக்கு தங்கை வேடத்தில் நடித்து வந்தவர் நடிகை அஞ்சலி. தற்போது இந்த சீரியலில் இருந்து இவர் விலகி விட்டதால் மற்றொரு நடிகை இவரின் கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அஞ்சலி பேட்டி ஒன்றில் தன்னுடைய, வாழ்க்கை பற்றி முதல் முறையாக கூறியுள்ளார். அதாவது, இவர் பிரபா என்பவரை காதலித்து வந்துள்ளார். இவரின் பெற்றோர் காதலுக்கு சம்மதம் தெரிவிக்காததால், பெற்றோரை மீறி, இவரின் கணவர் பிரபாவின் பெற்றோர் சம்மத்ததோடு திருமணம் செய்து கொண்டுள்ளாராம்.