Asianet News TamilAsianet News Tamil

"அதிமுக அரசின் மெகா ஊழலை முதலில் விசாரிங்க முதலமைச்சர் ஐயா " சேரன் பதிவால் கிளம்பிய புதிய சர்ச்சை

 தண்ணீர் தேங்காமல் வெளியேற திட்டம் தீட்டி சென்னைக்கு மட்டும் மத்திய அரசிடம் இருந்து அதிமுக அரசு வாங்கிய  900 கோடியை பற்றி விசாரிக்க இயக்குனர் சேரன் முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

seran tweet to cm about chennai flood
Author
Chennai, First Published Nov 7, 2021, 2:21 PM IST

கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை நேற்றிலிருந்து கன மழையாக மாறி பெய்து வருகிறது. விடிய விடிய தட்டிய மழையின் கோரத்தால் சென்னை நகரமே வெள்ளக்காடாக மாறியுள்ளது. சென்னையில் உள்ள அனைத்து சுரங்களிலும் மழை நீர் சூழ்ந்ததால் போக்குவரத்து முற்றிலும் முடங்கிப்போய் உள்ளது.

மேலடுக்கு சுழற்ச்சி காரணமாக மிக கன மழை இன்னும் சில நாட்களுக்கு தொடர வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன மழையால் சென்னையின் முக்கிய ஏரிகளான செம்பரம்பாக்கம், பூண்டி உள்ளிட்ட எரிகளிலிருந்து அதிகப்படியான நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதற்கிடையே வெள்ளம் சூழ்ந்துள்ள குடியிருப்பு பகுதிகளை முதலமைச்சர் முக ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார். நகர முக்கிய பகுதிகளில் தேங்கியுள்ள நிறை மாநகராட்சி ராட்சத மோட்டார் கொண்டு அகற்றி வருகிறது. அதோடு பொது மக்கள் தங்க வசதியாக  பள்ளிகளை திறந்து வைக்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.

seran tweet to cm about chennai flood

இவ்வாறு கன மழையை தாங்கமால் தவிக்கும் சென்னை மாநகரின் அவலம் பல காலமாக தொடர்ந்து வருகிறது. எந்த ஆட்சி வந்தாலும் எங்கள் தலையெழுத்தை மற்ற இயலாது என சென்னை வாசிகள் புலம்பி வருகின்றனர். இந்நிலையில் கடந்த அதிமுக அரசு மத்திய அரசிடமிருந்து பெற்ற நிதி என்னாச்சு என்று இயக்குனர் சேரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரபல இயக்குனர் சேரன் தனது சென்டிமென்ட் படங்களிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் மக்கள் மனதில் ஆழ பதித்தவர். அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் தனது கருத்துக்களை பதிவிட்டு வந்த சேரன் தற்போது வெளிப்படையாக எதிர்க்கட்சியை விமரிசித்துள்ளார்.

2015-ம் ஆண்டு மழையை யாராலும் மறந்திருக்கவே முடியாது. பெரும் சேதத்தை ஏற்படுத்திய அந்த பாதிப்பிற்கு பிறகு மழை நீர் தேங்காமல் இருக்க அன்றைய அதிமுக அரசால் திட்டம் தீட்டப்பட்டதோடு அதற்காக மத்திய அரசிடம் இருந்து  நிதியும் பெறப்பட்டுள்ளது.

ஆனாலும்  மீண்டும் 5 வருடம் கழித்து பெய்து வரும் பெரும் மழை முந்தைய பாதிப்புகளையே கண்முன்னே நிறுத்தி வருகிறது. இது தொடர்பாக தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இயக்குனர் சேரன்;

மழை பாதிப்பு வந்தால் தண்ணீர் தேங்காமல் வெளியேற திட்டம் தீட்டி சென்னைக்கு மட்டும் மத்திய அரசிடம் 900 கோடிக்கு மேல் வாங்கினார்களே முந்தைய ஆட்சியில்... இதுதான் அந்த திட்டத்தில் செயல்படுத்திய நகரமா.. இந்த ஃபைல முதல்ல எடுங்க முதலமைச்சர் அய்யா.  என பதிவிட்டுள்ளார்.

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios