பிரபல இயக்குநர் சேரன் நடித்து, இயக்கி இருக்கும் புதிய படம் ‘திருமணம்'. இந்த படத்தில் பிரபல நடிகரும், இயக்குநருமான தம்பி இராமையாவின் மகன் உமாபதி ஹீரோவாக நடித்துள்ளார். உமாபதிக்கு ஜோடியாக காவியா சுரேஷ் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.

மேலும், முக்கிய வேடங்களில் சுகன்யா, தம்பி இராமையா, எம்.எஸ்.பாஸ்கர், ஜெயபிரகாஷ், மனோபாலா, பாலசரவணன் ஆகியோர் நடித்துள்ளனர். 

இந்த படத்தை ‘PRENISS இண்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட்' நிறுவனம் சார்பில் பிரேம்நாத் சிதம்பரம் தயாரிக்கிறார். தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இந்த ட்ரைலரில் திருமணம் மற்றும் அதனால் பெண் வீட்டார் எப்படி பட்ட சங்கடங்களை சந்திக்கின்றனர், மணப்பெண் மற்றும் மணமகளின் மனம் எப்படி மாறுகிறது என தெளிவாக அலசியுள்ளார்.