விஜய் டிவி தொலைக்காட்சியில், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி ஜோடி. 

கிராமத்து மணம் கமழும் பாடல்களை பாடி, ரசிகர்கள் மனதை கட்டிப் போட்டனர்.  இதனால் இவர்களுக்கு உலகம் முழுவதிலும், ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்தது.  

இறுதியில்,  செந்தில் கணேஷ் சூப்பர் சிங்கர் பட்டத்தையும் வென்றார். தற்போது இந்த ஜோடிகள் தமிழகம் மற்றும் இன்றி, வெளிநாடுகளிலும் மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்க தொடங்கிவிட்டனர். 

மேலும் பின்னணி பாடல்கள் பாடுவதில் பிஸியாகி உள்ளனர். சமீபத்தில் வெளிவந்த சார்லி சாப்ளின் படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து பாடிய 'சின்ன மச்சான்' பாடல் செம ஹிட் அடித்தது. 

இதைத்தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் கமிட் ஆகி வருகின்றனர்.  செந்தில் கணேஷ் ஒரு படத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். 

 மேலும் இவர்கள் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் Mr & Mrs  சின்னத்திரை என்கிற நிகழ்ச்சியில் ஜோடியாக பங்கேற்றுள்ளனர்.  பொதுவாக கண்டாங்கி புடவை மற்றும் வேட்டி சட்டையுடன் வரும் ராஜலட்சுமி செந்தில் கணேஷ் தற்போது முதல் முறையாக இந்த நிகழ்ச்சியில் மாடர்ன் உடையில் வருகிறார்கள்.

செந்தில் கணேஷ் கோட் சூட் அணிந்து கொண்டு வருகிறார்.  ராஜலட்சுமி க்யூட்டாக ஒரு கவுன் அணிந்து வருகிறார். மேடையில் செந்தில் கணேஷ் ஐ லவ் யூ என ராஜலட்சுமியிடம் கூற இதற்கு ராஜலட்சுமி ஐ லவ் யூ டூ என  என கூறுகிறார். இது குறித்த ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.