'சூப்பர் சிங்கர் சீசன் 6 ' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தமிழகத்தின் மண் மனம் மாறாத கிராமிய பாடல்களை கணவன் - மனைவியாக பாடி, ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர்கள் செந்தில் கணேஷ் - ராஜலக்ஷ்மி தம்பதிகள்.

மேலும், சூப்பர் சிங்கர் சீசன் 6 பட்டத்தை செந்தில் கணேஷ் வென்றார். இதன் மூலம் இவருக்கு 50 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டது என்பது நாம் அறிந்தது தான்.

சென்னையில் ஒரு வீடும் வாங்க வேண்டும் என்பது பலரது கனவாக இருக்கும் நிலையில், இவர்களுக்கோ... அவர்கள் பிறந்து வளர்ந்த மண்ணில் ஒரு சொந்த வீடு கட்ட வேண்டும் என்பது தான் கனவாக இருந்தது.

இந்நிலையில் அந்த கனவை, நிஜமாகும் விதத்தில், புதுக்கோட்டை மாட்டம், கறம்பக்குடியில் செந்தில் கணேஷ் - ராஜலக்ஷ்மி தம்பதிகள் ஒரு புதிய மாடி வீட்டை கட்டி, கிரகப்பிரவேசம் செய்துள்ளனர். 

இந்த தகவலை அறிந்த ரசிகர்கள், இவர்களுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள். மேலும் இவர்கள் இருவரும், தற்போது வெளிநாடு மற்றும் உள்நாட்டில் பல மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருவது மட்டும் இன்றி, திரைப்படங்களில் பின்னணி பாடுவதிலும் படு பிஸி.