பொல்லாதவன், சிலம்பாட்டம், ஆடுகளம் என முன்னணி நடிகர்கள் படங்களில் துணை நடிகராக நடித்திருந்தாலும், இவரை ஒரு காமெடியனாக அனைவருக்கும் அறிய வைத்தது 'மூடர் கூடம்' திரைப்படம் தான். 

இந்த படத்தை தொடர்ந்து இவர், வரிசையாக பல படங்களில் நடித்தாலும், முன்னணி காமெடியன் என்கிற இடத்தை பிடிக்க தற்போது வரை போராடி வருகிறார்.

மேலும் மக்கள் மத்தியில் பிரபலமாக, கடந்த வருடம் நடைபெற்ற, பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடினார். இவரின் எளிமை, எதார்த்தமான குணம், கள்ளம் கபடம் இல்லாத மனது ரசிகர்களால் ரசிக்கப்பட்டாலும் ஒரு சில காரணங்களால் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால் மக்களை பொறுத்தவரை வெற்றி பெற வேண்டும் என ஆசைப்பட்ட நபர்களில் இவரும் ஒருவர்.

இவர் பிக்பாஸ் வீட்டில் உள்ளே சென்ற பிறகு தான் , நான் கர்ப்பமாக இருப்பதை மருத்துவர்கள் உறுதிசெய்ததாக என கூறினார் இவருடைய மனைவி கயல்விழி. பின் விஜய் டிவி இவருக்கு வளையக்காப்பு நிகழ்ச்சி ஒன்றையும் நடத்தினர். மும்தாஜ் தன்னுடைய தங்க வளையலை இவருக்கு அணிவித்து அழகு பார்த்தார். 

இந்நிலையில் சென்ராயனுக்கு குழந்தை பிறந்து இரண்டு மாதம் ஆகிறது.  தற்போது முதல் முறையாக தன்னுடைய குழந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை, சென்ராயன் வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். 

அந்த புகைப்படம் இதோ: