தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகர் சென்ராயன். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மேலும் பிரபலமானார். இவரின் வெகுளியான பேச்சு, நடவடிக்கைகள் வெகுவாக அனைவரையும் கவர்ந்தது. எனினும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடைசி சில வாரங்களில் குறைவான ஓட்டுகள் பெற்றதால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.  

தற்போது நடிகர் சென்ராயனின் மனைவி கயல்விழி கர்பமாக இருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்த போது,  நான்கு வருடங்களுக்கு பின்னர் தன் மனைவி கர்ப்பமாக இருக்கும் செய்தியை கேட்டு பிக்பாஸ் வீட்டிற்குள்ளேயே துள்ளிக் குதித்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி ரணகளம் செய்தார். 

இந்த காட்சி பார்ப்பவர்களையே மெய் சிலிர்க்க வைத்தது. தற்போது கர்ப்பமாக இருக்கும் அவரின் மனைவி கயல்விழி ஆசையை நிறைவேற்றியுள்ளார் சென்ராயன். 

சென்ராயனின் மனைவி கயல்விழி, நடிகை சினேகாவின் தீவிர ரசிகையாம். ஒரு முறையாவது அவரை நேரில் சென்று பார்க்க வேண்டும் என்பது அவரின் ஆசையாம். இதை ஒரு முறை சென்ராயனிடம் கூட தெரிவித்துள்ளார். 

இதனால் தற்போது கயல்விழிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் சினேகா வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார் சென்ராயன். மேலும் நடிகை சினேகாவும் அவருடன் நெருங்கி பழகியது மற்றும் இன்றி அவர்களுடன் புகைப்படங்களும் எடுத்து கொண்டு மகிழ்ச்சியாக இருந்துள்ளார்.