Asianet News TamilAsianet News Tamil

அசுரன் தனுஷையே மிஞ்சிடுவார் போல.... செல்வராகவனின் மிரட்டலான நடிப்பில் ‘சாணிக்காயிதம்’ - வைரலாகும் டிரைலர்

Saani Kaayidham trailer :சாணிக்காயிதம் படத்தில் செல்வராகவனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்துக்கு யாமினி ஒளிப்பதிவு செய்துள்ளார். 

Selvaraghavan keerthy suresh starrer Saani Kaayidham movie trailer released
Author
Tamil Nadu, First Published Apr 26, 2022, 3:09 PM IST

தமிழ் திரையுலகில் தனித்துவமான இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். தற்போது இவர் நடிகராகவும் அவதாரம் எடுத்துள்ளார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான பீஸ்ட் படம் தோல்வியடைந்தாலும், அப்படத்தில் இவரது நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்தன. 

தற்போது செல்வராகவன் நடிப்பில் தயாராகி உள்ள படம் சாணிக் காயிதம். அவர் கதையின் நாயகனாக நடிக்கும் முதல் படம் இதுவாகும். இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி உள்ளார். இவர் கடந்தாண்டு வெளியான ராக்கி படத்தை இயக்கி இருந்தார்.

சாணிக்காயிதம் படத்தில் செல்வராகவனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்துக்கு யாமினி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் வருகிற மே 6-ந் தேதி நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. 

Selvaraghavan keerthy suresh starrer Saani Kaayidham movie trailer released

இப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் 2 வாரமே எஞ்சி உள்ள நிலையில், இப்படத்தின் புரமோஷன் பணிகளும் வேகமெடுத்துள்ளன. அந்த வகையில் சாணிக்காயிதம் படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டு உள்ளது. 

அசுரன் தனுஷுக்கே டஃப் கொடுக்கும் வகையில் செல்வராகவனின் நடிப்பு அமைந்துள்ளதாக நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். அதேபோல் பொன்னி என்கிற கதாபாத்திரத்தில் மிரட்டலாக நடித்துள்ள கீர்த்தி சுரேஷுக்கும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்த டிரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்க செய்துள்ளது.

இதையும் படியுங்கள்... Actor Suriya : காவல்துறைக்கு உதவிக்கரம் நீட்டிய சூர்யா... ரியல் ஹீரோ என பாராட்டும் ரசிகர்கள்

Follow Us:
Download App:
  • android
  • ios