Saani kaayidham Promo: சாணிக்காயிதம் படத்தின் கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் நடிப்பில், ட்ரைலர் வெளியாகி வரவேற்ப்பை பெற்று தந்த நிலையில், அதிரடியான ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளனர்.
தமிழ் திரையுலகில் தனித்துவமான இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். தற்போது இவர் நடிகராகவும் அவதாரம் எடுத்துள்ளார். இவர் நடிப்பில் அண்மையில் பீஸ்ட் படத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்து பாராட்டுக்களை பெற்றவர்.
முதல் முதலாக ஹீரோவாக செல்வராகவன்:

இவர் ராக்கி படத்தின் இயக்குநருடன், முதல் முதலாக ஹீரோவாக களம் இறங்கியுள்ளார். சாணிக்காயிதம் படத்தில் செல்வராகவனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்துக்கு யாமினி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கதைக்களம்:

தனக்கு ஏற்பட்ட கொடுமைக்கு பழிவாங்க செல்வராகவனின் உதவியை கீர்த்தி சுரேஷ் நாடுவதாக கதைக்களம் காணப்படுகிறது. இப்படம் வருகிற மே 6-ந் தேதி நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
அதிரடியான ப்ரோமோ:

இந்த படத்தின் அதிரடியான ட்ரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பினை எகிற வைத்துள்ளது. பட ரிலீஸ் நெருங்கி வரும் வேளையில் தற்போது ஒரு புது அதிரடியான ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளனர்.
ஆக்ரோஷத்துடன் கீர்த்தி சுரேஷ்?

இந்த ப்ரமோவில் கீர்த்தி சுரேஷ் , கைகளைக் கொண்டு வெட்டுவது போன்று செயல்படுகிறார். அவரது செயல்பாட்டில் பழிவாங்கும் வெறி, ஆக்ரோஷம், கண்களில் விரக்தி போன்றவை காணப்படுகின்றன. செல்வராகவனுக்கு இது முதல் படம் போன்று தெரியவில்லை. ஏனெனில், மிரட்டல் காட்டியுள்ளார். தற்போது, இந்த பட ரீலிசுக்காக ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
