selvaragavan wife give the slim tips
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளைக் கொண்ட தரமான படங்களைக் கொடுத்து ரசிகர்களைக் கவர்ந்தவர் இயக்குனர் செல்வராகவன். இவர் இயக்கிய அனைத்து படங்களுக்கும் தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
அதே போல் அவரிடம், துணை இயக்குனராக இருந்து செல்வராகவனைக் காதலித்து கரம்பிடித்த அவரது மனைவி கீதாஞ்சலியும் 'மாலை நேரத்து மயக்கம்' என்ற தரமான படத்தை இயக்கியவர்.
இவர் கடந்த ஆண்டு மிகவும் குண்டாக இருந்தார். ஆனால் தற்போது மிகவும் ஸ்லிம்மாக செம பிட்டாக மாறி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.
இதனால் இவருடைய தோழிகள் பலர் எப்படி இவளோ ஸ்லிம்மாக மாறினாய் என தொடர்ந்து போன் மூலம் விசாரித்து வருகின்றார்களாம்.
இதானால் தான் ஏன் உடல் எடையை குறைத்தேன் என்பதை அவரே கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் ‘எல்லோரும் சொல்வதற்காகவும், குண்டாக இருக்கின்றோம் உடல் எடையை குறைத்தே ஆகவேண்டும் என்பதற்காகவும் இதை நான் செய்யவில்லை. எனக்கு நீண்ட நாட்களாகவே ஹிப்பில் வலி இருந்தது, இதனால், டாக்டர் அட்வைஸ் கேட்டபின் உடல் எடையை குறைக்க ஆரம்பித்தேன், கார்டியோ எக்ஸஸைஸ் இரண்டு மணிநேரம் செய்தேன். நடப்பேன், இருபது நிமிடம் ஓடுவேன். 45 நிமிடங்கள் மற்ற சில உடற்பயிற்சி, அரைமணி நேரம் நீச்சல் அடிப்பேன், இதனுடன் டயட் இருப்பேன்’ என்று கூலாக கூறியுள்ளார்.
