படம் தொடங்கி ஒரு வருடத்துக்கும் மேலாகியும் முடிக்காமல் ஜவ்வாக இழுத்து வருவதால்நடிகர் சூர்யா, இயக்குநர் செல்வராகவன் செம டென்சனில் இருப்பதாக படப்பிடிப்பு குழுவினர் கிசுகிசுத்து வருகிறார்கள்.

ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் 2017 நவம்பரில் துவங்கப்பட்ட படம் நந்தகோபாலன்குமாரன் என்கிற என்.ஜி.கே. சொந்தத் தம்பி தனுஷே கால்ஷீட் தராத நிலையில் செல்வராகவனுக்கு இப்படத்துக்கு கால்ஷீட் கொடுத்தார் சூர்யா. ஆனால் செல்வராகவன் வழக்கம்போல் மிக மந்தமாக படப்பிடிப்பை நடத்தி ஒரு முடிவுக்கே வராமல் இழுத்துக்கொண்டிருக்கிறார்.

வழக்கமாக சூர்யாவின் படங்கள் அதிக பட்சம் ஆறு மாதத்துக்குள் ரிலீஸாகிவிடும். ஆனால் என்.ஜி.கே’ துவங்கி 14 மாதங்கள் ஆகியும் தற்போதைய நிலவரம் என்ன, எத்தனை சதவிகித படப்பிடிப்பு முடிந்திருக்கிறது, இதுவரை எடுத்த படத்தில் கதை என்ற ஒன்று இருக்கிறதா அல்லது இனிமேல்தான் கதைக்குள் வருவாரா செல்வராகவன் என்ற பல கேள்விகளுடன் சூர்யாவும் தயாரிப்பாளர்களும் தத்தளிக்கிறார்களாம்.

மேலே குறிப்பிட்ட கேள்விகளுடன் சூர்யா கடந்த வாரம் செல்வராகவனைச் சந்தித்தபோது ‘அதெல்லாம் எனக்குத்தெரியாது ராஜா. நான் கேக்குறவரைக்கும் நீ டேட்ஸ் குடுத்துக்கிட்டே இருக்கணும்’ என்று செல்வா தெனாவட்டாக சொல்ல அவரது சட்டையைப் பிடிக்காத குறையாக சண்டைக்குப் போய்விட்டாராம் சூர்யா.