சூர்யாவை வைத்து செல்வராகவன் இயக்கிவரும் ‘என்.ஜி.கே’ படம் ஒருவருடத்துக்கும் மேல் ரிலீஸாவதால் அவரது ரசிகர்கள் கொந்தளித்து வருவதை ஒட்டி தனது சொந்தக் கதை சோகக்கதைகளில் ட்விட்டரில் வெளியிட்டு பரிதாபம் சம்பாதித்து வருகிறார் இயக்குநர் செல்வராகவன்.

இன்று காலை வெளியிட்ட ட்விட்டர் பதிவில்... கோடுரமான வறுமையில் பிறந்து வளர்ந்தவன் நான்.இரு வேளை உண்டால்  அரிது.அண்டை வீட்டுக்காரர்களின் அன்பு காப்பாற்றியது. ஆயின் சமூகம் கேலி செய்யும்.நீ எல்லாம் என்ன சாதித்துக் கிழிக்கப் போகிறாய் என.எனக்கு தோள் கொடுத்து என் ரசிகர்கள் சாதித்தனர். அதனால்தான் அவர்கள் மட்டுமே என் நண்பர்கள்! என்று பதிவிட்டார்.

பின்னர் சற்று நேரத்திலேயே கொடூரமான என்பதற்குப் பதில் கோடுரமான என்று ஸ்பெல்லிங் மிஸ்டேக் விட்டதற்காக மன்னிப்பும் கோரினார். 

1991-ல் செல்வராகவனுக்கு 15 வயது ஆகும்போது அவரது அப்பா கஸ்தூரி ராஜா ‘என் ராசாவின் மனசிலே’ என்ற சில்வர் ஜூப்ளி படம் இயக்கி பெரும் செல்வந்தராய் மாறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.