seenu ramasamy twitter
திரைப்பட பைனான்சியர் அன்புச்செழியன் உத்தமர் என்றும் அவர் தவறாக சித்தரிக்கப்படுவது வேதனை அளிக்கிறது என்றும் இயக்குநர் சீனு ராமசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது திரையுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் இணை தயாரிப்பாளரும் , நடிகர் சசிகுமாரின் மைத்துனருமான அசோக்குமார் நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டார்.
அவரது தற்கொலைக்கு சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் கந்துவட்டிக்கு பணம் வழங்கியது தான் காரணம் என அவர் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்தார். கந்துவட்டி கேட்டு அவர் கொடுமைப்படுத்தியதாகவும், தனது குடும்பத்தினரை அவதூறாக பேசியதாகவும் அந்த கடிதத்தில் அசோக்குமார் தெரிவித்திருந்தார்.
அசோக்கின் தற்கொலை தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சினிமா நட்சத்திரங்கள் பலர் அசோக்குமாருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்த நிலையில், இயக்குநர் சீனு ராமசாமி அன்புச்செழியனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில், ‛ எம்.ஜி.ஆர்., சிவாஜி போல் இன்றைய நடிகர்கள்இல்லை என்றும். அன்பு செழியன் போன்ற உத்தமர்கள் ஏனோ தவறாக சித்தரிக்கப்படுவது வேதனை அளிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நான் நியாயத்தின் பக்கம் நிற்கிறேன் என்றும் இயக்குநர் சீனு ராமசாமி டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளது சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
