நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், நடிகர், இயக்குனர் என பன்முகம் கொண்டவருமான சீமான், தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை  விஜயலட்சுமி. 

சீமான் தன்னிடம் பழகியதை நிரூபிக்கும் விதமாக ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டார். அதன் பின்னர் திரைப்படங்களில் நடிப்பதில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தியதால், சீமான் பற்றி எதுவும் பேசவில்லை.

இந்த நிலையில் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழாவில் சிவ லிங்கத்தை தரிசனம் செய்து புகைப்படம் ஒன்றை வெளியிட்ட சீமானுக்கு எதிராக ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டார் விஜயலட்சுமி. அந்த வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் நடிகை விஜயலட்சுமியை அவதூறாக பேசி, திட்டி வீடியோ வெளியிட்டும். மேலும் பலர் விஜயலட்சுமி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வழக்கம் போல பொது தளத்தில் பயன்படுத்தும் ஆபாச வார்த்தைகளால் ஒரு பெண் என்று கூட பார்க்காமல் அநாகரிகமாக பேசியுள்ளார்கள்.


ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த விஜயலட்சுமி உங்களுக்கு, உங்கள் அண்ணனுக்கும் வைக்கிறேன் பார் பெரிய ஆப்பு என்று தொலைபேசி அழைப்பை துண்டித்துள்ளார். அதன்பின் சீமான் அரை நிர்வாணத்தில் தன்னிடம் இருந்த வீடியோக்களில் ஒரு சாம்பிள் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோக்கள் வைரலானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது விஜயலட்சுமியின் பிறந்த நாளில் சீமான் கலந்து கொண்ட பழைய புகைப்படங்கள், சமூக வலயத்தளத்தில் மீண்டும் உலா வர துவங்கியுள்ளது. விஜயலட்சுமி சீமானுக்கு கேக் ஊட்டி விடும் புகைப்படங்களும் இதில் இடம்பெற்றுள்ளது ஹை லைட்.