திரையுலகிலும் சரி அரசியல் களத்திலும் சரி தமிழ் மொழியின் வன்மையாலும், சமுதாயக்கருத்துக்களாலும் உயர்ந்தவர்கள் பலர். அந்த வகையில் சீமானும் ஒருவர். மிகவும் யதார்த்தமான இயக்குனரான இவர், நாம் தமிழர் கட்சியை தொடங்கியதன் மூலம் அரசியல்வாதியானவர். அரசியலில் தமிழர் தான் தமிழகத்தை ஆள வேண்டும் என பிடிவாதமான கொள்கை கொண்டிருக்கும் இவரின் பேச்சை கேட்பதற்கு என தனி ஒரு ரசிகர் கூட்டமே இருக்கிறது. 

இவர் நடிகர் விஷால் தொடங்கி இருக்கும் சமூக நல இயக்கம் ஒன்றினை தற்போது கேலி செய்திருக்கிறார். நடிகராக இருந்து தற்போது நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆகி இருக்கிறார் விஷால். இவர் நடிகர் சங்க தேர்தல் போது செய்த வேலைகளை எல்லாம் பார்த்துவிட்டு நிஜ அரசியல்வாதிகள் கூட மிரண்டுவிட்டனர். இந்நிலையில் விஷால் சமீபத்தில் மக்கள் நல இயக்கம் என ஒரு கொடியை அறிமுகப்படுத்தி, சமூக நல இயக்கம் ஒன்றை ஆரம்பித்திருக்கிறார்.

இந்த இயக்கத்தை மக்களுக்கு தொண்டு செய்வதற்காக மட்டுமே தான் ஆரம்பித்திருப்பதாக விஷால் தெரிவித்திருந்தாலும். இது அவரின் அரசியல் பிரவேசத்திற்கான ஆரம்பமோ என்றே அரசியல் அறிவுஜீவிகள் சிந்திக்கின்றனர். இது ஒரு புறம் இருக்க நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் விஷாலின் இந்த இயக்கத்தை பின் வருமாறு விமர்சித்திருக்கிறார். 

விஜய் அரசியலுக்கு வரட்டும், விஷால் வரட்டும், ஆனால் விஷால் கட்சி ஆரம்பித்தது போல தெரியவில்லை. அவர் ஏதோ பனியன் விளம்பரத்தை காட்டுவது மாதிரி தான் இருக்கு. யார் வேண்டுமானாலும் மக்களுக்கான நல இயக்கங்கள் ஆரம்பித்து சேவை செய்யலாம். ஆனால் ஆளனும்னு நினைக்க கூடாது” எனதெரிவித்திருக்கிறார்.ஒரு வேளை சீமானின் தமிழர் தான் தமிழ் நாட்டை ஆளனும் எனும் கொள்கைக்கு, ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட விஷால் ஒத்துவர மாட்டார் என்பதனால் தான் சீமான் இப்படி காட்டமாக சொல்லி இருக்கிறாரோ என யோசிக்க வைத்திருக்கிறது சீமானின் இந்த பேச்சு.