seeman directing g.v.prakash movie

'பாஞ்சாலம் குறிச்சி' படத்தின் மூலம், இயக்குனராக அறியப்பட்ட சீமான், சமீப காலமாக தீவிரமாக அரசியலில் கவனம் செலுத்தி வந்தார், ஒரு சில படங்களில் நடித்தாலும் திரைத்துறையை விட்டு சற்று ஒதுங்கியே இருந்தார்.

இந்நிலையில் தற்போது அரசியலை சற்று ஒதுக்கி வைத்து விட்டு மீண்டும் 'கோபம்' என்கிற திரைப்படத்தின் மூலம், இயக்குனராக அடியெடுத்து வைக்கிறார்.

இந்த திரைப்படத்தில் ஜல்லிக்கட்டு, நெடுவாசல் என தன்னுடைய இசையின் மூலம் மக்களுக்கு போராடிய ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நைட்க்கிறார்.

எப்போதுமே அரசியல் சூழல் குறித்து தன்னுடைய கோபத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்தி வரும் சீமான். இந்த படம் குறித்து பேசிய போது.... ஒரு தனிமனிதனின் கோபத்தால் என்ன விளைவுகள் வருகிறது என்பதை குறித்து இந்த திரைப்படம் எடுக்க உள்ளதாகவும் அதனால் தான் இப்படத்திற்கு 'கோபம்' என்று பெயர் வைத்துள்ளதாக தெரிவித்தார்.

விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளதாகவும், இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.