தெலுங்கில் ஆரம்பிச்சிட்டாங்களே தமிழில் இன்னும் எப்போ தொடங்கும் என தெரியவில்லையே என இங்குள்ள பிக்பாஸ் ரசிகர்கள் வாய்விட்டு வறுத்தப்பட்டுக் கொண்டிருந்தனர். சமீபத்தில் பிக்பாஸ் சீசன் 4-யை தொகுத்து வழங்க உள்ள கமல் ஹாசனின் கெட்டப்பு இதுவா? என்று புகைப்படங்கள் கூட தாறுமாறு வைரலாகின. அதில் முரட்டு மீசை, தாடியுடன் செம்ம ஸ்டைலாக இருந்த கமல் போட்டோவை யாரும் மறந்திருக்க மாட்டோம்.

இப்போது அந்த கெட்டப்பில் தான் கமல் ஹாசன் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழில் பிக்பாஸ் சீசன் 4 தொடங்குவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை புரோமோ வீடியோவுடன் வெளியிட்டிருக்கிறது விஜய் டி.வி. அதில் லாக்டவுனால் வேலை இல்லாமல் இருப்பவர்களை உலக சுகாதார மையத்தின் அறிவுறுத்தலை பயன்படுத்தி வேலைக்கு செல்லுங்கள் என கூறியுள்ள கமல்.. இதோ நான் வேலைக்கு வந்துட்டேன்... வேலையை  ஆரம்பிக்கலாமா? என்ன வேலை வழக்கமான கமல் ஹாசனின்  கம்பீர உரையுடன் புரோமோ வீடியோ ஒளிபரப்பப்பட்டது. 

இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமானிடம் பிக்பாஸ் நிகழ்ச்சியை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரான கமல் ஹாசன் தொகுத்து வழங்குவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், புரணி பேசுவதை பார்க்க நிறைய மக்கள் விரும்புறாங்க, அது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. பிக்பாஸ் நிகழ்ச்சி காஸ்ட்லியான புரணி பேசும் நிகழ்ச்சி என பங்கமாக கலாய்த்துள்ளார். சீமான் பிக்பாஸ் நிகழ்ச்சியை இப்படி கேவலமாக கலாய்ப்பது இது முதல் முறை இல்லை, சீசன் ஆரம்பித்ததில் இருந்தே அந்த நிகழ்ச்சியை எதிர்த்து வருகிறார். ஆனால் இந்த முறை அவர் கொடுத்த புது விளக்கம் கமல் ரசிகர்களை சற்று கடுப்பேற்றியுள்ளது.