ராஜ்கிரணுக்கு என் வலி தெரியுமா?... அவர் இஸ்லாமியர்களுக்காக போராடினாரா? சீமான் பதிலடி
சீமானை விமர்சித்து முகநூலில் நடிகர் ராஜ்கிரண் பதிவிட்டது வைரல் ஆன நிலையில், அதற்கு சீமான் பதிலடி கொடுத்து இருக்கிறார்.
மணிப்பூரில் நடந்த வன்முறைச் சம்பவத்திற்கு எதிராக நாம் தமிழர் கட்சி சார்பில் நடத்தப்பட்ட கண்டன போராட்டத்தில் பேசிய சீமான், பாதிக்கப்பட்டவர்களுக்காக நாம் குரல் கொடுக்கின்றோம், அதனால் நமக்கு எந்தவித லாபமும் கிடையாது. மணிப்பூர்ல இருப்பவர்கள் நமக்கு ஓட்டுபோடப் போகிறார்களா. இங்கே இருக்கின்ற இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களுமே நமக்கு ஓட்டுப் போடுவதில்லை. நாம தான் அவர்களை தேவனின் பிள்ளைகள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம், ஆனால் அவர்களெல்லாம் சாத்தானின் பிள்ளைகளாக மாறி பல வருஷம் ஆச்சு” என பேசி இருந்தார்.
சீமானின் இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பியதை அடுத்து அதற்கு ஏராளமான இஸ்லாமிய மத தலைவர்களும், அரசியல்வாதிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நடிகர் ராஜ்கிரணும் இதுகுறித்து காட்டமான ஒரு பதிவை தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் போட்டிருந்தார். அதில், இஸ்லாமியர்களுக்கு, எவ்வளவு அநீதிகள் இழைக்கப்பட்டாலும், எவ்வளவு வன்மத்தோடு அக்கிரமங்களுக்கு ஆட்படுத்தப்பட்டாலும், அவர்கள் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு, தங்களால் முடிந்த உதவிகளை பிற சமுதாயத்தினருக்கும் செய்து கொண்டு, அமைதியாக வாழ்ந்து கொண்டிருப்பதற்கு காரணம், இயலாமையோ, கோழைத்தனமோ, அல்லது உயிருக்கு பயந்தோ அல்ல.
இதையும் படியுங்கள்... கண்ட கழிசடைகளும் பேச ஆரம்பித்தால்.. விளைவு மிக மோசமாயிருக்கும்! நடிகர் ராஜ்கிரண் ஆவேச பதிவு!
"இறப்பதற்காகவே பிறந்திருக்கிறோம். இறை வழியில் மரணத்தை நேசிக்கிறோம், என்ற கொள்கையினால்", பொறுமை காக்க வேண்டும் என்று,
இறைவனின் இறுதி தூதுவர், இஸ்லாமிய மக்களின் மாபெரும் தலைவர், நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கையையும், வார்த்தைகளையும்
பின்பற்றுவதால், பொறுமையைவிட சிறந்த பொக்கிஷம் இல்லை என்று, பொறுமை காக்கிறோம். இந்தப்பொறுமையை, தவறாகப்புரிந்து கொண்டு, கண்ட கழிசடைகளும் பேச ஆரம்பித்தால், அதன் விளைவு மிக மோசமாயிருக்கும்” என சீமான சாடி இருந்தார்.
இந்நிலையில், இதற்கு சீமான் பதிலடி கொடுத்துள்ளார். அநீதிக்கு எதிராக கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் என்றைக்காவது போராடியதுண்டா எனவும், இஸ்லாமியர்களை அவமதித்ததாக கூறி நான் மன்னிப்பு கேட்டால் அவர்களெல்லாம் எனக்கு ஓட்டு போடுவார்களா எனக் கேட்டார். நடிகர் ராஜ்கிரண் இஸ்லாமியர்களுக்காக எத்தனை போராட்டங்களில் ஈடுபட்டு இருக்கிறார், என் வலி அவருக்கு இருக்கிறதா என அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த சீமான், ராஜ்கிரண் என் அண்ணன், அவர் என்னை திட்டுவதற்கு முழு உரிமையும் இருக்கிறது பேசிட்டு போகட்டும் என கூறினார்.
இதையும் படியுங்கள்... யுவன் போட்ட டியூனை அட்லீக்காக ஆட்டைய போட்டாரா அனிருத்? காப்பி சர்ச்சையில் சிக்கிய ஜவான் பட பாடல்