தமிழ் சினிமாவுல தாறுமாறா வளர்ந்துட்டு வர்ற செம்ம நட்சத்திரம் அவரு. இப்படியொரு ஸ்டார் வாழ்க்கையை கனா-வுலேயும் நினைக்காத பயபுள்ள. ஏதோ ஒரு மூளையில நின்னு அதுவா, இதுவா இல்ல எதுவா?ன்னு பொழப்ப ஓட்டிட்டிருந்த பையனுக்கு, வெண்ணிற ஆடை மூர்த்தி பாணியில சொல்றதுன்னா...குபீர்ர்ர்ர்ன்னு கூரை பிய்ச்சுக்கிட்டு அடிச்சுது யோகம். 

ஸ்மால் பட்ஜெட்ல ஹிட்டடிச்ச அவரோட மார்க்கட் இன்னைக்கு இருக்குற லெவலே தனி லெவல். கடந்த ரெண்டு மூணு படங்கள் பெருசா அள்ளி கொட்டலை ஆனாலும் கூட தம்பி தங்ககம்பியாதான் இன்டஸ்ட்ரியில வளர்ந்துட்டு வர்றாரு!
இது ஒரு பக்கம் இருக்கட்டும்!

அற்புதமான இயக்குநரோட கையால் அறிமுகமான பொண்ணு அது. கிளாமராய் நடித்தால் மட்டுமே பொழைக்க முடியும்! எனும் டிரெண்டுக்கு அஞ்சலி செலுத்துவார்  என்று எக்கச்சக்கமாக எதிர்பார்க்கப்பட்ட கிளி. அவர் முகமும் கிளாமரா? கிலோ என்ன விலைண்ணே? எனும் ரேஞ்சில்தான் துவக்கத்தில் இருந்தது. 

நாலு படங்கள் நல்லா ஓடி மார்க்கெட் நச்சுன்னு இருக்கும் வரைக்கும் பொண்ணு நல்லாதான் இருந்துச்சு. ஆனால் சந்தை சரிய ஆரம்பித்ததும் சதையை காட்ட துவங்கிவிட்டார். ’ஞான் கிளாமருக்கு ரெடியானு’ என்று ஒரு போட்டோ ஷூட் நடத்தி அவர் வெளியிட்ட ஸ்டில்களை பார்த்து தமிழ்நாடே தவிச்சு போயிடுச்சு. பின்னே, இத்தனியூண்டு பொண்ணுக்கு ’உள்ளே’ இம்மாம் ’பெரிய’ திறமையான்னு ஆளாளுக்கு அசந்து போனார்கள். 

அதுவரையில் அந்த பொண்ணு  டாகுமெண்ட்ரி நடிகை என்று கிண்டலடித்து வந்த கிழ ஹீரோக்கள் கூட நாக்கை தொங்க போட்டபடி தங்கள் படத்துக்கு புக் செய்ய துடித்தார்கள். யாருடைய அழைப்பையும் ஒத்தி வைக்கவில்லை, சட்டுபுட்டுன்னு சரி சொல்லி வசூலை வாரிக் குவித்தது பொண்ணு. அவ்வ்வ்ளோ பெரிய்ய்ய்ய்ய்ய மனசு அதுக்கு. 

பணம் ஒரு பக்கம் குவிய, மறுபக்கமோ சர்ச்சை சேலையை மடித்துக் கட்டிக் கொண்டு அந்த நாயகியை பிடுங்கி தின்றது பழைய இயக்குநர் ஒருவரால். ‘நான் தான் கற்பனை களஞ்சியமாச்சே! என்ன விட்டுட்டு யார் கூடவோ நடிக்கிறியே?’ என்று வாலண்டியராக வம்பிழுத்து அந்த நாயகியை சுண்டெலியை பூனை போல் துரத்தினார். 

இதனால் சில காலம் ஃபீல்டை விட்டே ஒதுங்கிய நடிகை பிறகு மீண்டும் ரீ எண்டர் ஆனார். அப்போதுதான் அவரது கண்ணில் விழுந்தார் நம்ம் நியூ எமர்ஜிங் ஹீரோ. 

ஒரு பங்ஷனில் இருவரும் சந்தித்துக் கொண்டார்கள். நாயகியின் ஹிட் பட டயலாக்குகளை நம்ம தம்பி அந்த ஹீரோவின் வாய்ஸில் பேசி மிமிக்ரி செய்து காட்ட, பொண்ணு பொதக்கடீர்ர்ர்ர்ன்னு விழுந்துடுச்சு. அந்த பங்ஷன் முழுக்க பொண்ணோட பார்வை நாயகனையே விழுங்கிட்டு இருந்துச்சு. கிளம்பும்போது போன் நம்பர்கள் பரிமாறிக் கொண்டார்கள். 

ஆக்சுவலி பையன் மனசுல எந்த ஃபீலிங்கும் இல்லை பொண்ணை பத்தி. ஆனா ஹீரோயினோ பைத்தியமாகிவிட்டார். அன்று ராத்திரியே ஆரம்பித்தார் தன் விளையாட்டை. ஹாய்! ஹலோ!வில் துவங்கி பார்மல் சாட்டிங் தாண்டி, பொண்ணு கொஞ்சம் பர்ஷனலாய் பேச்சை துவக்கியபோது அசத்தியில் நாயகன் தூங்கியே போயிருந்தார். 

மறுநாள் காலையில் போனை எடுத்துப் பார்த்தால் நாயகியின் அரைகுறை அஜால் படங்கள். இவர் ‘என்ன மேடம் இதெல்லாம்?’ என்று கேட்க, ‘சாரி டியூட் என்னோட காஸ்ட்யூம் டிஸைனருக்கு அனுப்புறதுக்கு பதிலா மாத்தி அனுப்பிட்டேன்.’ என்றார். இவரும் நம்ம்ம்ம்ம்ம்பி ‘ஓ.கே’ போட, அடுத்த நொடி ‘எப்டியிருக்குது ரெண்டும்?’ என்று கேள்வி, ’எது என்று இவர் கேட்க?’, ‘என் காஸ்ட்யூம், ஹேர்ஸ்டைல் ரெண்டும்’ என்று பூடகமா வந்துச்சு பதில். 

தவளை தண்ணியில குதிக்க நினைக்குறது தம்பிக்கு புரிஞ்சு போச்சு! ஆனா ரொம்பவே கட்டுப்பெட்டியான அந்த பையன் ’எனக்கு இந்த அறிவெல்லாம் பெருசா கிடையாது. ஓ.கே. பை’ என்று கட் செய்துவிட்டு நகர்ந்தார். இவர் நழுவ நழு...பொண்ணோ வழுகி வழுகி விழுந்தது. 
பையன் கூச்சப்படுறான் என்று தெரிந்ததும் பொண்ணுங்களுக்கு ஒரு கெத்து வருமே! அது நாயகிக்கு ரொம்ப நல்லாவே வந்துச்சு. ஹீரோவுக்கு கல்யாணமாயிடுச்சு, குழந்தையிருக்குதுன்னு தெரியும். ஆனாலும் கன்னாபின்னா காதல் (அவ்வ்வ்வ்...) கண்ணை மறைக்கவில்லை, குருடே ஆக்கிவிட்டிருந்தது. 

அதனால் துணிந்து அடித்தார் போனை, எதிர்முனை ‘ஹலோ’ என்றதும்,  ‘எனக்கு நீங்க வேணும்! பர்மணெண்டா கேட்கல. நான் யார் வாழ்வையும் கெடுக்குற பொண்ணு இல்ல! ஆனா உன்னை என்னால மறக்க முடியலை. ஜஸ்ட் கொஞ்ச நாளாச்சும் உங்க அன்பு வேணும்’ என்றார். 
தம்பி தடாலடியா ‘இது அன்பை எதிர்பார்க்கிற பேச்சா தெரியலையே’ என்றதும், அங்கிருந்து ‘யெஸ், நான் என்னையவே உன்கூட ஷேர் பண்ணிக்குறேன். உன் விரல் பட்டாலே போதும், ரொம்ப சந்தோஷமாயிடுவேன். போட்டோவுல பார்த்தேல்ல, ஃப்ரெஷ்ஷான பொண்ணுதான் நானு’ என்று கூலாக பதில் வந்தது. 

ஆனாலும் தம்பி மடங்காமல், மயங்காமல் எஸ்கேப் ஆகிக் கொண்டேஇருக்க, ஒரு நாள் ஷூட்டிங் ஸ்பாட் தேடியே வந்துவிட்டார். மதுரையே கலகலக்க நடந்து கொண்டிருந்தது ஷூட்டிங். கலவரபேயாக பொண்ணு குதிச்சுது ஸ்பாட்டில். கேரவேனுக்குள் நாயகன் இருக்க, சம்பிரதாய அனுமதி கூட வாங்காமல் உள்ளே நுழைந்தது. உள்ளே தம்பியும், பரோட்டா நடிகரும் பப்பரக்கா என்று படுத்து டி.வி.டி. பார்த்துக் கொண்டிருந்தனர். 

பொண்ணு அப்படியே ஹீரோ மேல் விழ, பரோட்ட பதறி எழ, ஹீரோவின் லிப்போடு லிப் வெச்சு செம்ம்ம்ம்ம்ம்ம பசக் ஒன்றை வைத்தது பொண்ணு. உதறி எழுந்த ஹீரோ அடிக்க ஓங்கிய கையை, பின் தளர்த்தி ‘வேணாங்க.எனக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது. நீங்க நல்ல ஆர்ட்டிஸ்ட், உங்க படத்த பார்த்து பெரிய மரியாத வெச்சிருக்கேன். இப்பவும் நல்ல ஸ்டோரி கிடைச்சா பின்னிடுவீங்க. நானே ஹெவி ஸ்டோரி படத்துல நடிச்சா உங்களை ரெக்கமெண்ட் பண்ணுவேன், நீங்க இருந்தா அந்தப் படம் நல்லா இருக்கும். ப்ளீஸ் உங்களை மாத்திக்குங்க.’ என்றார். 

பரோட்டா வேனிலிருந்து இறங்கப் பார்க்க, சட்டென்று அவரது சட்டையைப் பிடித்து நிறுத்திய பொண்ணு, ஹீரோவை பார்த்து ‘இந்த செகண்ட்ல இருந்து நான் மாறிடுறேன். பட் ஐ லவ் யூ எவர். 

ஹூம் கூல். மூணு பேருக்கும் காஃபி சொல்லு!’ என்றபடி கால் மேல் கால் போட்டு பெட்டில் அமர்ந்தது. 
அதுக்கு பிறகு ரெண்டு பேரும் பல பங்ஷன்ல சந்திச்சுக்கிட்டாங்க. பையனோட நேர்மை அந்த ஹீரோயினுக்கும், பொண்ணோட டீப் லவ் நம்ம தம்பிக்கும் ரொம்பவே பிடிச்சுடுச்சு பரஸ்பரம். ஆனா எல்லை தாண்டியதே இல்லை. 
இப்போ வரைக்கும் பொண்ணு காத்திருக்குது, அந்த ஹெவி சப்ஜெக்ட்ல ஜோடி போட!