Asianet News TamilAsianet News Tamil

அந்தரங்க ரகசியம்! பொண்ணுங்களை சுத்தல்ல விட்ட நடிகரிடம் அழகை காட்டி அனுபவித்த நடிகை...

கிசுகிசுக்களை விரும்பாதவர்கள் நம்மில் யார்? கைதூக்குங்கள் பார்ப்போம்! அதிலும் கிளாமர் கிசுகிசுக்கள் என்றால் கேட்கவா வேண்டும். வட்ட சம்மணம் போட்டு உட்கார்ந்து, வக்கனையாக கேட்போமில்லையா...

Secret privacy! Actress who enjoyed with boyfriend
Author
Chennai, First Published May 27, 2019, 7:40 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

கிசுகிசுக்களை விரும்பாதவர்கள் நம்மில் யார்? கைதூக்குங்கள் பார்ப்போம்! அதிலும் கிளாமர் கிசுகிசுக்கள் என்றால் கேட்கவா வேண்டும். வட்ட சம்மணம் போட்டு உட்கார்ந்து, வக்கனையாக கேட்போமில்லையா...

பக்கத்து விட்டு பழனிசாமியை பற்றிய ஹாட் கிசுகிசுக்கே ஆளாய் பறக்கும் நாம் கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என்று கொடி கட்டும் நட்சத்திரங்களை பற்றிய காஸிப்புகள் என்றால் காதே காண்டாகுமளவுக்கு ஆர்வம் காட்டுவோம் அப்படித்தானே! அரிதார புள்ளிகளோடு, அரசியல் புள்ளிகள் மற்றும் வி.வி.ஐ.பி.க்கள் பற்றிய காஸிப் என்றால் கந்துவட்டிக்கு கடன் வாங்கி ரூம் போட்டு கூட மூளை மிளிர கேட்கலாம்! எனும் உங்களின் ஏக்கம் பக்காவாய் எங்களுக்கும் புரியும்.

அந்த ஏக்கத்தை தாறுமாறாக தீர்த்து வைப்பதுதான் இந்த ‘ராஜ ரகசியம்’ பகுதியின் நோக்கம். சினிமா, அரசியல்  என பல துறைகளில் தெறிக்கவிடும் கில்லாடி பேர்வழிகளின் கிளாமர் பக்கங்களை பெருமூச்சுவிட புரட்டிப்பார்க்க நீங்கள் தயாரா!....

பாலையும், பால்கோவாவையும் ஒன்றாய் சேர்த்து பிசைந்தால் மதமதப்பான ஒரு மஞ்சள் நிறம் கிடைக்குமே அதுதான் அந்த ஹீரோவின் தேக நிறம். போனில் இவரிடம் நாலு வார்த்தை பேசிவிடமாட்டோமா என்று ஐ.எஸ்.டி. கால் புக் பண்ணி அதிரிபுதிரியாய் வழியும் பெண்கள் சினிமாவை தாண்டியும் எக்கச்சக்கம். 

Secret privacy! Actress who enjoyed with boyfriend

கோடம்பாக்கத்தில் சில ஹீரோக்களுக்கு என்னதான் சினிமா அதிர்ஷ்டம் உச்சத்தில் இருந்தாலும் கூட, ’அந்த’ விஷயத்தில் கொஞ்சம் அசமந்தமான போக்கே நிலவும். ஆனால் நம்ம அண்ணனுக்கோ அதிலும் அடைமழைதான். இத்தனைக்கும் ஜிம்முக்கு சென்று கும்மென்று பாடியை வைத்துக் கொள்ளும் வழக்கமெல்லாம் கிடையாது. விரும்பியதை சாப்பிட்டு, பிடிச்சமேனிக்கு வாழும் பக்கா பிராக்டிக்கல் பேர்வழி. 
 
பெல் டைரக்டருக்கு இவர் மீது அப்படி என்னதான் ஈர்ப்போ தெரியவில்லை. படமெடுத்தால் மட்டுமல்ல தன் வீட்டில் போட்டோ எடுத்தாலும் கூட இவரையும் ஒரு பிரேமில் நிற்க வைத்துக் கொண்டால்தான் அவருக்கு திருப்தி கிடைக்கும். விளைவு ஹீரோவின் மச்சம் மட்டும் நாளுக்கு நாள் உச்சமோ உச்சம் தொட்டது. லட்சக்கணக்கான ரசிகைகளின் ராத்தூக்கத்தை கெடுக்கும் மன்மத ராசா பயபுள்ள இவரு. 
 
உடன் நடிக்கும் ஹீரோயின்கள் வலிந்து ‘அப்பாயிண்ட்மெண்ட்’ கேட்டாலும் கூட ‘நாட் இண்ட்ரஸ்டட்’ என்று அரசமரத்தடியில் தேங்காயை உடைச்சா மாதிரி தெறிப்பாய் பதில் சொல்லிவிடுவார். அவர் அப்படித்தான்! 

இவரோடு நடித்த பாலிவுட் பட்சிகள் கூட இவரை டிக் செய்ய முடியாமல் டக் அவுட் ஆனதுதான் மிச்சம். தான் செம்ம ஹாண்ட்ஸமாய் இருக்கிறோம் என்கிற எண்ணம் மனம் நெடுக வியாபித்திருந்ததால் தன்னிடம் சிணுங்கும் எந்த பெண்ணையும், சீண்டாமலேதான் நகர்வார். 
இப்பேர்ப்பட்ட அழகிய அசுரனையும் சமீபத்தில் சுத்தலில் விட்டார் சுந்தரி ஒருவர். இத்தனைக்கும் மார்க்கெட்டிலிருந்து கெட் - அவுட் ஆன கிளி அது என்பதுதான் மேட்டரே.

இன்னமும் வெளியே வராத அந்த படத்தின் ஷூட்டிங் குளிரை குத்தகைக்கு எடுத்த பிரதேசத்தில் துவங்கியது. வழக்கம்போல் நாயகியை பார்த்து பெரிதாய் அலட்டிக் கொள்ளவில்லை மிஸ்டர் ஹாண்ட்ஸம். 

Secret privacy! Actress who enjoyed with boyfriend

ஆனால் அந்த ஒரு நாள் நிலமையையே தலைகீழானது. பெரும் புல்வெளியில் ஷூட்டிங். ஹீரோ கீழே காத்திருக்க, குளிர் காற்று வீசிய மெல்லிய மழை தூறலில் கேரவேனிலிருந்து சட்டென இறங்கிவந்தார் ஹீரோயின். சட்டென்று ஹீரோவின் பெரு மூளைக்குள் அப்டியொரு பல்பு பளிச்சென எரிந்தது, சிறு மூளைக்குள் டொய்ங்! டொய்ங்! என ஒரு மணி. இதுவரையில் அவர் அனுபவித்திராத பீலிங். சிம்பிளாய் சொல்வதென்றால் அண்ணன் டோட்டலாய் கவிழ்ந்தார். 

எதையுமே மூஞ்சிக்கு நேராகவே பேசிப் பழக்கப்பட்ட ஹீரோ, அந்த பொண்ணை அழைத்து ‘யூ ஆர் ஆஸம்!’ என்று சத்தமாக புகழ, ஒட்டு மொத்த க்ரூவும் வாயடைத்துப் போய்விட்டது.  இவரா இப்படி மாறிட்டார்? என்று ஆளாளுக்கு தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டார்கள். .
இந்த மலைரோடுல ஓடுன லாரி கவிழ்ந்திருக்கு, பஸ்ஸு கவிழ்ந்திருக்கு ஆனா மலைக்கு மேலே பறக்கிற கழுகு கவிழ்ந்ததா சரித்திரம் இல்லையேடா! தலைகனத்துல சிறகு விரிச்ச கழுகு இப்படி தலைகுப்புற பறக்குதே! என்று ஆளாளுக்கு அங்கலாய்த்துக் கொண்டார்கள். 

ஒரு கட்டத்தில் ஹேண்ட்ஸம் ஹீரோ தன் ஈகோவை விட்டு அந்த பொண்ணிடம் ‘லெட்ஸ் டேட் பே?’ என்று கேட்டே விட்டார். ஆனால் இவர் ஜென்மத்திலும் எதிர்பாராத வகையில் எதிர் திசையிலிருந்து சின்ன புன்னகையுடன், ‘ஸாரி டியூடு’ என்று பதில். 

ஆனானப்பட்ட அப்சரஸெல்லாம் வாலன்டியரா ஆஜர் போட்டபோது அலட்சியம் செய்தவருக்கு இது நெத்தியடி பனிஸ்மெண்டாய் தெரிந்தது. மனிதர் வெறுத்தே போனார்! ஷூட்டிங்கில் ஈடுபாடில்லை, யாரிடமும் முகம் கொடுத்துப் பேசவுமில்லை. ஒரு நாள் முழுக்க ரூமை விட்டு வரவுமில்லை. 
அரசல் புரசலாக கசிந்த விஷயம் ஒரு கட்டத்தில் யூனிட் முழுக்க தெள்ளத் தெளிவாக பரவிவிட்டது. தயாரிப்பாளரும், இயக்குநரும் ஹீரோயினிடம் வாய் விட்டு அழாத குறையாக பேசிப்பேசி கன்வின்ஸ் செய்தனர். இருபது மணி நேர யோசனைக்குப் பின் இறங்கி வந்த ஹீரோயின் ‘ஓ.கே. நான் அவரை மீட் பண்ணி பேசுறேன். ஷூட்டுக்கு அழைச்சுட்டு வர்றேன்!’ என்றார். 

ஒரு இனிய மாலையில் ஜில் ஏறிய ஹீரோவின் அறை முழுக்க கதகதப்பு பற்றி எரியுமளவுக்கு அந்த மீட்டிங் நடந்து முடிந்தது. 
மறுநாள் காலையில் ஸ்பாட்டில் நம்பர் ஒன்னாக ஆஜராகியிருந்தார் ஹீரோ! மனிதரின் முகத்தில் அப்படியொரு புத்துணர்ச்சி. தூரத்து மலைமுகட்டிலிருந்து ஹீரோவும், ஹீரோயினும் கைகோர்த்து பேசியபடி நடந்து வரவேண்டும்! இதுதான் காட்சி. 

ஹீரோயினின் கைகளை இறுகப்பிடிச்சபடி இறங்கி வருகையில் ‘பட் ஏன் என்னை இவ்வளவு தவிக்க விட்ட?’ என்று இவர் கேட்க, ‘நான் காலேஜ்ல படிக்கிறப்பவே உங்களை சைக்கோத்தனமா சைட் அடிச்சிருக்கேன். ஆனா உங்களுக்கு ஜோடியானதும் அந்த கிக் எனக்கு ரொம்ப வித்தியாசமா பட்டுச்சு. எத்தனையோ பொண்ணுங்களை சுத்தல்ல விட்ட உங்களை ரெண்டு நாள்  நான் சுத்தல்ல விடணும்னு நினைச்சேன்! அதான் இந்த கேம்.” என்றதும், சட்டென்று நின்று ஹிரோயினின் லிப்பை லாக் செய்தார் தன் உதடுகளால்.
ஒட்டுமொத்த ஷூட்டிங் கூட்டமும் அதிர்ந்து நின்றது, டைரக்டர் உட்பட. 
காரணம் இந்த லிப் லாக்! டைரக்டர் சொன்ன சீனிலேயே இல்லாதது.

Follow Us:
Download App:
  • android
  • ios