பிரபல இயக்குனரும், நடிகை அமலா பாலின் முன்னாள் கணவருமான ஏ.எல் விஜய், அமலா பாலிடம் இருந்து விவாகரத்து பெற்ற பின்னர்,  தன்னுடைய முழு கவனத்தையும் திரைப்படங்கள் இயக்குவதில் செலுத்திவந்தார்.

பிரபல இயக்குனரும், நடிகை அமலா பாலின் முன்னாள் கணவருமான ஏ.எல் விஜய், அமலா பாலிடம் இருந்து விவாகரத்து பெற்ற பின்னர், தன்னுடைய முழு கவனத்தையும் திரைப்படங்கள் இயக்குவதில் செலுத்திவந்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்நிலையில் இவர் மருத்துவர் ஐஸ்வர்யா என்பவரை, ஜூலை 11ம் தேதி அதாவது இன்று திருமணம் செய்து கொள்ள உள்ளதாக சமூகவலைதளத்தில் கடந்த 29 ஆம் தேதி கடிதம் மூலம் தெரிவித்திருந்தார்.

மேலும் இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள் என அறிவித்தார். இதைத் தொடர்ந்து இன்று இவர்களுடைய திருமணம் எளிமையான குடும்பத்தினர் முன்னிலையில் நடைபெற்று முடிந்துள்ளது.

மணமக்கள் இருவரும் விஜய்யின் பெற்றோரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இவர்களுக்கு பிரபலங்கள் மற்றும் இன்றி ரசிகர்களுக்கும் தங்களுடைய வாழ்த்து மழையை பொழிந்து வருகிறார்கள்.