மூன்று மாதம் ஊரடங்கு காரணமாக, மின் வாரிய ஊழியர்கள் சரியாக ரீடிங் எடுக்கமுடியாததால், தற்போது இஷ்டத்துக்கு கரண்ட் பில் போட்டு வருகிறார்கள் என, தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்து வருகிறது.

ஏற்கனவே, கட்டண கொள்ளை குறித்து மின்துறை ஊழியர்களிடம் நடிகர் பிரசன்னா கேள்வி கேட்க, அதற்க்கு மின் வாரிய துறையும் பதில் கொடுத்தது. மேலும் பிரசன்னா விஷயத்தில் மின் வாரியம், முரட்டுத்தனமாக செயல்பட்டதாக கூறி திமுக தலைவர் ஸ்டாலினும் விமர்சனம் செய்தார்.

இதை தொடர்ந்து நேற்றைய முன் தினம் , பிரபல நடிகை ராதாவின் மகள், கார்த்திகா... ஜூன் மாதத்திற்கு மட்டும் ஒரு லட்சம் கரண்ட் பில் வந்திருப்பதாக, மும்பை மின் வாரியத்துறையிடம் கேள்வி எழுப்பினார்.

குறிப்பாக இதுவரை இல்லாத வகையில் தற்போது கரண்ட் பில் மிகவும் அதிகமாக இருப்பதாகவும் இது என்ன கணக்கு என்றே புரிய வில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினர்.  கார்த்திகா நாயரின் குற்றச்சாட்டுக்கு இன்னும் எந்த விதமான பதிலும் மும்பை மின் துறையிடம் இருந்து வரவில்லை என்று தெரிகிறது.

இந்த நிலையில் தற்போது பாலிவுட் மற்றும் கோலிவுட் திரையுலகில் கலக்கி வரும் முன்னணி நடிகைகளில் ஒருவரான, டாப்ஸியும் தன்னுடைய வீட்டிற்கு கரண்ட் பில் 36 ஆயிரம் வந்து இருப்பதாக குற்றம்சாட்டி உள்ளார். கடந்த மூன்று மாதங்களாக ஊரடங்கு அமலில் இருந்தது என்பதால் தன்னுடைய வீட்டில் எந்த விதமான புதிய எலக்ட்ரிக் பொருள்களும் வாங்கவில்லை என்றும் ஏற்கனவே தான் வாங்கிய பொருட்களை மட்டுமே பயன்படுத்தி வருவதாகவும் அவ்வாறு இருக்கும்போது திடீரென கரண்ட் பில் இவ்வளவு உயர்ந்தது ஏன் என்று எனக்கு தெரியவில்லை என்றும் மின்கட்டணம் எந்தவகையில் சார்ஜ் செய்யப்படுகிறது என்பது குறித்து விளக்க வேண்டும் என்றும் சரமாரியாக சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

டாப்ஸியின் இந்த டுவிட்டுக்கு இவருடைய ரசிகர்கள் பலர், தங்களுக்கும் இதே போல், அதிக தொகையுடன் கரண்ட் பில் சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். எனவே விரைவில் இது குறித்து முன் வாரிய துறை பதிலளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.