பெங்களூரில் மாடலிங் துறையில் கால் பதித்து, பின் தமிழ் சினிமாவில் 'உன்னாலே உன்னாலே' படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகியவர் நடிகர் வினய். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை சதா நடித்திருந்தார். 

முதல் படமே இவருக்கு வெற்றி படமாக அமைந்ததால், தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. 

தமிழில்,உன்னாலே உன்னாலே, ஜெயம் கொண்டான், ஆயிரத்தில் இருவர், துப்பறிவாலன், அரண்மனை 2, உள்ளிட்ட  15 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர் தற்போது அம்மாயி, நேத்ரா... ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் வினய் தமிழில் 'ராமன் தேடிய சீதை', 'பொய்' ஆகிய படங்களில் நடித்த பிரபல நடிகை விமலா ராமனுடன் மிகவும் நெருக்கமாக இருக்கும்  ஒரு புகைப்படம் வெளியிட்டார்.

அதை பார்த்த ரசிகர்கள், இவர்கள் இருவரும் காதலித்து வருவதாகவும்,  விரைவில் திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார்கள் என கிசுகிசுத்து கிளம்பியது. இந்நிலையில் இது பற்றி விளக்கம் அளித்துள்ள நடிகர் வினய் "நாங்கள் 9 வருடங்களாக நண்பர்களை இருக்கிறோம். தங்களுக்குள் வேறு எதுவும் இல்லை என கூறியுள்ளார். ஆனால் இதற்கும் சில ரசிகர்கள் எல்லா நடிகர்களும் காதலிக்கும் போது இதை தானே சொல்கிறார்கள் என வினய்கே பதிலடி கொடுத்து வருகிறார்கள்.