பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  அங்கு தொடர் சிகிச்சையில் இருந்த எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை கடந்த 14ம் தேதி முதலே கவலைக்கிடமானது.  இதையடுத்து பாடும் நிலா எஸ்.பி.பி. நலம் பெற்று மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டுமென ஆகஸ்ட் 20 ஆம் தேதி அன்று, மாலை 6 மணிக்கு தமிழகம் முழுவதும் திரையுலகினர், இசைப்பிரியர்கள், ரசிகர்கள், சாமானிய மக்கள் என லட்சக்கணக்கானோர் கையில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். 

இதை தொடர்ந்து, நாளையும் அவருடைய உடல் நலம் நல்லபடியாக தேறி விரைவில் குணமடைய வேண்டும் என, மதம், மொழில், இனம் கடந்து, உலகில் உள்ள அனைவரும் கூட்டு பிரார்த்தனை ஒன்றை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், எஸ்.பி.பி யின் உடல்  நிலை குறித்து, ரசிகர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் தினமும், மருத்துவனை நிர்வாகம் சார்பில் அறிக்கை மூலம் தெரியப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, " எஸ்.பி.பி உடல் நிலை சீராக உள்ளதாகவும், அவருக்கு தொடர்ந்து, சுவாச கருவி மற்றும் எக்மோ கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனை நிர்வாகம் சார்பில், நாளுக்கு நாள் எஸ்.பி.பி உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளதாக வெளியாகி வரும் தகவல் உலகெங்கிலும் உள்ள இவருடைய ரசிகர்களை நிம்மதியடைய செய்துள்ளது.