பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவர் சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  அங்கு தொடர் சிகிச்சையில் இருந்த எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை கடந்த 14ம் தேதி முதலே கவலைக்கிடமானது.  இதையடுத்து  எஸ்.பி.பி. நலம் பெற்று மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டுமென ஆகஸ்ட் 20 ஆம் திரையுலகினர், இசைப்பிரியர்கள், ரசிகர்கள், சாமானிய மக்கள் என லட்சக்கணக்கானோர் கையில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். 

அதன் பலனாக கடந்த சில நாட்களாகவே எஸ்.பி.பி. உடல் நிலை குறித்து நல்ல தகவல்களை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டு வருகிறது. மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கூட எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை சீராகி வருவதாகவும், உயிர் காக்கும் கருவிகளுடன் தொடர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்திருந்தது. தற்போது மயக்க நிலையில் இருந்து முழுமையாக மீண்டுள்ள எஸ்.பி.பி.க்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

அதன் பலனாக கடந்த சில நாட்களாகவே எஸ்.பி.பி. உடல் நிலை குறித்து நல்ல தகவல்களை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டு வருகிறது. மேலும் அவ்வப்போது, எஸ்.பி.பி சேரனும் தந்தையின் உடல் நலம் குறித்த தகவலை வெளியிட்டு வந்தார். அந்த வகையில், கடந்த செப்டம்பர் 7 திங்கள் கிழமை எஸ்.பி.பிக்கு கொரோனா முழுமையாக குணம் அடைந்து விட்டதாக தெரிவித்தார்.

ஏற்கனவே எஸ்.பி.பிக்கு எக்மோ கருவி மூலம்மும், செயற்கை சுவாச கருவிகள் மூலமும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதோடு, பிசியோ தெரபி உள்ளிட்ட சிகிச்சைகள் கொடுக்கப்பட்டு வருவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவலில், அவருக்கு ட்ரக்யாஸ்டமி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த முறை சிகிச்சை மூலம், தொண்டையில் துளையிட்டு டிரக்கியோஸ்டமி கருவி பொருத்தப்பட்டு எஸ்.பி.பிக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறதாம். இப்படி ஒரு தகவல் வெளியாகியுள்ள நிலையில், விரைவில் இது குறித்தும் எஸ்.பி.பி யின் மகன் சரண் உண்மை தகவலை வெளியிட வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உ ள்ளது.