sayisha check for kethisuresh

வனமகன் படத்தின் மூலம் தமிழ் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அறிமுகம் ஆனவர் பிரபல பாலிவுட் நடிகர் திலீபனின் பேத்தி சாயிஷா.

ஏற்கனவே இவர், நடிகர் நாகர்ஜூனாவின் மகன் அகிலுக்கு ஜோடியாக தெலுங்கில் ஒரு படத்தில் நடித்துள்ளார். மேலும், அஜய் தேவ்கன் இயக்கிய ஷிவாய் படத்திலும் நடித்தார்.

இந்நிலையில் இவர் வனமகனை தொடர்ந்து, தற்போது பல தமிழ் திரைப்படங்களில் கமிட் ஆகிவருகிறார்.

ஏற்கனவே வாரிசு நடிகையான, கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து தனுஷ், விஜய், விக்ரம், சூர்யா என முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து வரும் நிலையில், வாரிசு நடிகையாக என்ட்ரி கொடுத்திருக்கும், சாயிஷாவிற்கும் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

மேலும் ஒரு முன்னணி நடிகர்களுடன், நடிக்க கீர்த்தி சுரேஷுடன் பேச்சு வார்த்தை நடத்திவந்த படக்குழுவினர், கீர்த்தி அதிகமாக சம்பளம் கேட்டதால் அவருக்கு பதில் சாயிஷாவிடம் பேச்சுவார்த்தை நடித்த வருகின்றனராம். இதன் மூலம் கீர்த்திக்கு செக் வைத்துவிட்டார் சாயிஷா என கூறப்படுகிறது.