'காதல் கண்கட்டுதே', படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அதுல்யா ரவி. இந்த படத்தை தொடர்ந்து 'கதாநாயகன்', 'ஏமாளி', 'நாகேஷ் திரையரங்கம் உள்ளிட்ட படங்களில் கநாயாகியாக மட்டும் இன்றி, முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தற்போது  இயக்குனர் சமுத்திரக்கனியுடன் அடுத்த 'சாட்டை 2 '  , 'நாடோடிகள் 2' உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் அதுல்யா ரவி சாட்டை 2  படப்பிடிப்பில் படக்குழுவினருடன் செய்த அட்டகாகாசத்தை  வீடியோ எடுத்து  தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

 

அதில் படக்குழுவின் டெக்னீஷியன் ஒருவரின் காதை பிடித்து அதுல்யா இழுத்துள்ளார். காதை இழுத்தது அதுல்யா என்று தெரியாமல் அந்த நபர் அதிர்ச்சியுடன் திரும்பி அவரை பயமுறுத்த வர, ஆனால் அதுல்யா என்று தெரிந்ததும் சிரித்து கொண்டே சென்றவாறு இந்த வீடியோ உள்ளது. அதுல்யாவின் சேட்டையான இந்த வீடியோவுக்கு ஆயிரக்கணக்கில் லைக்ஸ்கள் குவிந்து வைரலாகி வருகிறது.