Asianet News TamilAsianet News Tamil

’அரசியலுக்கு வரும் தகுதி தமிழ் நடிகர்களில் ஒருவருக்குக் கூட இல்லை’...போட்டுத்தாக்கும் சத்யராஜ்...

 "நான் 41 ஆண்டுகாலமாக சினிமாவில் இருக்கிறேன். இந்த காலக்கட்டத்தில் அரசியல் என்னை எப்போதும் கவர்ந்ததில்லை. முதல்வர் பதவியில் அமர்பவர்களுக்கு தியாகமும், அர்ப்பணிப்பும் தேவை.
 

sathyaraj interview
Author
Chennai, First Published Jan 8, 2019, 1:58 PM IST

’நடிகர்களுக்கு ஓட்டுப்போட்டு முதல்வராக்கும் முட்டாள்தனத்தை இனியும் செய்யாதீர்கள். முதல்வர் பதவிக்கு மட்டுமே குறிவைக்கும் அவர்கள் ஒருபோதும் மக்கள் சேவையை மனதில் கொண்டு அரசியலுக்கு வருவதில்லை’ என்று விளாசுகிறார் நடிகர் சத்யராஜ்.sathyaraj interview

சிவகார்த்திகேயனின் வெற்றிப்படமான ‘கனா’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றுக்காக கேரளா சென்றிருந்த சத்யராஜ், "நான் 41 ஆண்டுகாலமாக சினிமாவில் இருக்கிறேன். இந்த காலக்கட்டத்தில் அரசியல் என்னை எப்போதும் கவர்ந்ததில்லை. முதல்வர் பதவியில் அமர்பவர்களுக்கு தியாகமும், அர்ப்பணிப்பும் தேவை.

அரசியலுக்கு வரவிரும்பும் நம் தமிழ் சினிமா நடிகர்களில் ஒருவருக்குக் கூட அந்த குணம் இல்லை. எனவே அந்த பதவிக்கு நடிகர்களாகிய  நாங்கள் தகுதியற்றவர்கள். அந்த பதவிக்கு செல்ல நினைப்பவர்கள் ஆரம்பத்தில் இருந்தே மக்களின் பிரச்னைகளைப் புரிந்துக்கொண்டு பயணிக்க வேண்டும்.sathyaraj interview

அரசியலுக்கு வரும் நடிகர்கள் மக்களுக்கு சேவை செய்ய வரவில்லை. முதல்வர் பதவியை குறிவைத்து தான் அவர்கள் அரசியலுக்கு வருகின்றனர். அந்த பதவியை ஏற்கும் அளவுக்கு தகுதியான நடிகர்கள் யாரும் இல்லை. 

ஆனால் கேரள முதல்வர் பினராயி விஜயனை நான் மதிக்கிறேன். அவர் சிறந்த அரசியல்வாதியாக திகழ்கிறார். தமிழகத்திலும் அவரை போல நல்ல தலைவர்கள் உள்ளனர். எனவே நாம் நமது முதல்வர்களை திரைத்துறையில் இருந்து தேர்வு செய்யக்கூடாது. கேரள முதல்வர் போல் தமிழகத்தில் நல்லகண்ணு என்னும் சிறந்த தலைவர் இருக்கிறார். அவர்களை போன்றவர்கள் தான் தமிழகத்தை ஆள வேண்டும் என்று விரும்புகிறேன்" என்றார் அவர். 

Follow Us:
Download App:
  • android
  • ios