நேற்றைய தினம், தமிழ் திரைப்பட நடிகர்கள், தயாரிப்பாளர்கள், உள்ளிட்ட திரையுலகை சேர்ந்த அனைவரும் இணைந்து தமிழகத்தில் காவேரிமேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், ஸ்டெர்லைட் தொழிற்ச்சாலையை இழுத்து மூடக்கோரியும் மௌன அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல் விஜய், சூர்யா, தனுஷ், விக்ரம், சத்தியராஜ் உள்ளிட்ட  நடிகர்களும், பழம்பெரும் நடிகர்கள் சிவகுமார், தயாரிப்பாளர் தாணு, பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டு தங்களுடைய ஆதரவை தெரிவித்தனர்.

இந்த அறவழி போராட்டம் முடியும் தருவாயில், அங்கிருந்த மக்கள் நடிகர் சத்யராஜ் ஒரு சில வார்த்தைகள் பேசவேண்டும் என்று  கோரிக்கை வைத்ததால் ஒரு சில வார்த்தைகளை மிகவும் ஆவேசமாக பேசினார் சத்தியராஜ். இந்த போராட்டத்தில் அவர் பேசியதாவது எந்த அரசுக்கும் பயப்படமாட்டோம், ராணுவமே வந்தாலும் நாங்கள் அஞ்சமாட்டோம் என ஆக்ரோஷமாக பேசினார்.

கேலி செய்த தமிழிசை:

இதை அறிந்த பிஜேபியின் தமிழக மாநில தலைவர் தமிழிசை சௌந்தராஜன், ராணுவமே வந்தாலும் அஞ்சமாட்டோம் என சொல்லும் அவர் வீட்டில், ஐ டி துறை அனுப்பினால் தானாக பயந்துவிடுவார் என கேலி செய்வது போல் மிரட்டல் விடுத்தார். 

பதிலடி கொடுத்த சத்தியராஜ்:

இதனையடுத்து இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகர் சத்யராஜ், தமிழிசைக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் நான் ஒரு சாதாரண நடிகர், ஏதோ அப்பா வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். 40 வருடங்களாக நான் நடித்துக் கொண்டிருக்கிறேன், இதுவரை வருமான வரித்துறை சோதனை வந்ததில்லை.அப்படி வந்தாலும் எதுவும் அவர்களுக்கு தேறாது என்பது தான் உண்மை. நான் சம்பாதிக்கும் பணத்திற்கு சரியாக வரிக்கட்டி வருகிறேன் என்பதால் எதற்கும் பயப்புட போக போவாதில்லை, இதனால் என்னை கண்டு மாபெரும் அரசியல் தலைவர்கள் அஞ்சவேண்டாம் என கூறி... என தன்னை பயமுறுத்திய தமிழிசைக்கு பல்பு கொடுத்துள்ளார் சத்யராஜ்.