தமிழ் திரையுலகில் வில்லனாக அறிமுகமாகி, கதாநாயகனாக உயர்ந்த நடிகர் சத்யராஜ். இப்போது அவர் பல படங்களில் குணசித்திர நடிகராக நடித்து வருகிறார்.  தீர்ப்புகள் விற்கப்படும் என்ற புதிய படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் வில்லனாக அறிமுகமாகி, கதாநாயகனாக உயர்ந்த நடிகர் சத்யராஜ். இப்போது அவர் பல படங்களில் குணசித்திர நடிகராக நடித்து வருகிறார். தீர்ப்புகள் விற்கப்படும் என்ற புதிய படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த படத்தை இயக்கி வரும் தீரன், இந்த படம் குறித்து கூறுகையில் இது பரபரப்பான அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த படம், மகலுக்காக தந்தையை பழிவாங்கும் கதை. இதில் சத்யராஜ் டாக்டர் வேடத்தில் நடித்துள்ளார். முக்கியமாக, சண்டை காட்சிகளில் டூப் போடாமல் அவரே சண்டை போட்டார்.

அவருடைய மகளாக ஸ்ருதி வெங்கட் நடித்துள்ளார். மேலும் அரசியல் செல்வாக்குள்ள தொழிலதிபராக, மதுசூதனன் நடிக்கிறார், ஹரிஷ் உத்தமன், சார்லி, ரேணுகா, மயில்சாமி மகன் யுவா மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். மீரா சாகிப் ராவ் தயாரிதித்துள்ளார்.

 தீயவர்களை ஆதிக்கம் அதிகமாகும் போது உருவாகும் தனிநபர்கள் கோபம் பற்றிய இந்த படம் பேசும் என்றும், பெண்களுக்கு எதிரான குற்றம் தான் படத்தின் கரு என இயக்குனர் கூறியுள்ளார், ஒரே நாளில் நடக்கும் கதை என்றும் இப்படத்தில் மருத்துவம் தொடர்பான ஒரு சஸ்பென்ஸ் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளர்.

படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், தற்போது 80 சதவீத காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டு விட்டதாகவும் விரைவில் இப்படத்தின் மற்ற காட்சிகளையும் படமாக்கி விடுவோம் என கூறியுள்ளார் இயக்குனர்.