sathiyam thetre distrubute free napkins for ladies
பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் நடிப்பில், தற்போது சமூக கருத்தோடு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வரும் திரைப்படம் 'பேட்மேன்'. இந்த வாரம் வெளியான படங்களில் இதுவரை அதிகம் வசூல் செய்துள்ள திரைப்படம் என்கிற பெருமையும் இந்த படத்திற்கு உண்டு.
இந்நிலையில் இந்த படம் சென்னை சத்தியம் திரையரங்கத்தில் வெளியாவதை முன்னிட்டு, நேற்று முதல் சத்தியம் திரையரங்கிற்கு வரும் பெண்களுக்கு டாய்லெட்டில் இலவச நாப்கின்கள் வழங்க திரையரங்கு நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
சத்தியம் திரையரங்கத்தின் இந்த முயற்சியை பெண்கள் பலர் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
சத்தியம் திரையரங்கம் எப்படி பெண்களுக்கு உதவும் வகையில் இப்படி ஒரு முயற்சியை எடுத்துள்ளதோ அதே போல் பெண்கள் அதிகமாக வரக்கூடிய இடங்களிலும் இதோ போன்ற ஏற்பாடுகள் செய்தால் பேருதவியாக இருக்கும் என பலர் தெரிவித்து வருகின்றனர்.
