ஆர்.ஆர்.ஆர் படம் பொங்கல் ரேஸில் இருந்து விலகியதால், வலிமை மட்டும் சோலோவாக ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒரு தமிழ் படமும் அதில் இணைந்துள்ளது.

அஜித் நடிப்பில் ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகி உள்ளது வலிமை. இப்படத்தை சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை போன்ற படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்கி உள்ளார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், இப்படத்தை தயாரித்து உள்ளார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

2019-ம் ஆண்டே தொடங்கப்பட்ட இப்படம் இரண்டு ஆண்டுகள் கடின உழைப்புக்கு பின் தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இப்படம் வருகிற 2022-ம் ஆண்டு பொங்கல் விருந்தாக திரைக்கு வருகிறது.

அதே சமயம் வலிமை படத்துக்கு போட்டியாக பாகுபலி இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஆர்.ஆர்.ஆர் படமும் ரிலீசாக இருந்தது. தற்போது ஒமைக்ரான் பரவல் வேகமெடுத்து வருவதால், இப்படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. பல்வேறு மாநிலங்களில் கடும் கட்டுப்படுகள் விதிக்கப்பட்டுள்ளதால் படக்குழு இந்த முடிவை எடுத்துள்ளது.

இருப்பினும் வலிமை படம் திட்டமிட்டபடி ரிலீசாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஆர்.ஆர்.ஆர் படம் பொங்கல் ரேஸில் இருந்து விலகியதால், வலிமை மட்டும் சோலோவாக ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், வலிமை படத்துக்கு போட்டியாக சதீஷ் நடித்துள்ள நாய் சேகர் படம் ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது. விஜய்யின் பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தான் இப்படத்தையும் தயாரித்துள்ளது. விரைவில் நாய் சேகர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.