satha acting glamorus movie
2002 ஆம் ஆண்டு, தெலுங்கில் ஜெயம் படத்தின் மூலம் அறிமுகம் ஆன சதா, தமிழிலும் இதே படத்தின் ரீமேக் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து அஜித், விக்ரம், மாதவன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்தார்.

இவர் தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, இந்தி , கன்னடம் போன்ற பல்வேறு மொழிப்படங்களிலும் கவனம் செலுத்தி வந்ததால். தமிழில் கிடைத்த வாய்ப்புகளை தக்க வைத்துக்கொள்ளவில்லை. மேலும் ஒரு சில ஆண்டுகளில் இவருக்கு மார்க்கெட் குறைந்தது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் வடிவேலு கதாநாயகனாக நடித்த 'எலி' படத்தில் அவருடன் ஒரு பாடலுக்கு நடனமாடினார். இதை தொடர்ந்து எந்த வாய்ப்புகளும் இல்லாமல் இருந்த இவர் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் இவர் தற்போது டார்ச் லைட் என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்டர் இன்று வெளியானது. இந்த படத்தில் சதா மிகவும் செக்சியாக இருப்பது போல் உள்ளது இதனால் பல ரசிகர்கள் இது சதா வா என அதிசியாகியுள்ளனர்.
