'குற்றப்பரம்பரை' நாவலை படமாக்கும் முயற்சியில் நடிகரும், இயக்குனருமான சசிகுமார் இறங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை அவரே இயக்கி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

பிரபல எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தி எழுதிய 'குற்றப்பரம்பரை' என்னும் நாவலை, படமாக்க, தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களாக வலம் வரும் இயக்குனர் பாரதிராஜா மற்றும் பாலா ஆகிய இருவருக்கும் இடையே பணி போர் ஏற்பட்டது அனைவரும் அறிந்தது தான்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்த பிரச்சனை கடந்த சில வருடங்களுக்கு முன் விஸ்வரூபம் எடுத்ததால், இருவரும் நேரடியாகவே விமர்சித்துக் கொண்டனர். பின் இது குறித்து பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கம் கொடுத்த பின்பே இந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது. இந்த பிரச்சனைக்கு பின், இருவருமே 'குற்றப்பரம்பரை' நாவலை படமாக எடுக்கும் முயற்சியை கைவிட்டனர்.

இந்நிலையில் இவர்களுக்கு போட்டியாக தற்போது 'குற்றப்பரம்பரை' நாவலை படமாக்கும் முயற்சியில் நடிகரும், இயக்குனருமான சசிகுமார் இறங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை சசிகுமாரே இயக்கி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் இப்படத்தின் கதையை வேல ராமமூர்த்தி எழுத உள்ளதாகவும், பிரபல ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே சுப்ரமணியபுரம், ஈசன் போன்ற படங்களை இயக்கியுள்ள சசிகுமார், இதையடுத்து கடந்த 12 ஆண்டுகளாக எந்த படத்தையும் இயக்கவில்லை. 

இதனால் 'குற்றப்பரம்பரை' படம் மூலம் அவர் இயக்குனராக ரீ-எண்ட்ரி கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. பாரதிராஜா, பாலா போன்ற திரை ஆளுமைகள் ஆசைப்பட்டு நடக்காமல் போன குற்றப்பரம்பரை படம், சசிகுமாரின் முயற்சியில் படமாகுமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.