சூப்பர் ஸ்டாரின் மருமகனான தனுஷ் தற்போது தமிழ் பட உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.  கடந்த வருடம் இவர் நடித்து வெளியான 'வடசென்னை' , 'மாரி 2', ஆகிய இரண்டு படங்கள் திரைக்கு வந்தது.

இவ்விரு படங்களுக்கும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால், அடுத்து தனுஷ் நடிப்பில் திரைக்கு வரும் படம் எதுவாக இருக்கும் என ரசிகர்களின் மிகப்பெரிய பார்ப்பார்ப்பாக இருந்தது.  

இதற்க்கு தற்போது  விடை கிடைத்திருக்கிறது.  தனுஷ் நடித்து கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய 'என்னை நோக்கி பாயும் தோட்டா' படம் நீண்டகால தயாரிப்பில் இருந்து வந்த நிலையில், அனைத்து பணிகளும் நிறைவடைய உள்ளதாகவும்.  படத்தொகுப்பு பின்னணி இசை சேர்ப்பு போன்ற பணிகள் இப்போது விறுவிறுப்பாக நடைபெற்று  வருவதாக கூறப்படுகிறது.

இந்த படத்தை மிக விரைவில் திரைக்கு கொண்டுவரும் முயற்சியில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இரவு-பகலாக ஈடுபட்டிருக்கிறார். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை மேகா ஆகாஷ் நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் பேட்ட படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு நண்பனாக நடித்த சசிகுமார் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.