sasikumar and samuthirakkani combination again for nadodigal 2

கடந்த 2009ஆம் ஆண்டு இயக்குநர் சமுத்திரகனி இயக்கத்தில் எம்.சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற ஒன்று. வசூலிலும் நல்ல லாபம் பார்த்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இப்போது அதன் இரண்டாம் பாகத்தை தயாரிக்கிறார்கள். இதற்காக மீண்டும் சமுத்திரகனி - சசிகுமார் கூட்டணி இணைகிறது. நாடோடிகள் மற்றும் இன்ஸ்பைர் எண்டர்டெயின்மெண்ட் இணைந்து பிரம்மாண்டமாக இதனைத் தயாரிக்கின்றன. சமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்க, இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது. இப்படத்துக்கான மற்ற நடிகர் நடிகையர் தேர்வு நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைக்க, என்.கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார்.

தமிழர் திருநாளன்று இப்படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட படக்குழுவினர், நாடோடிகள் படத்தைப் போன்றே நாடோடிகள் 2 படமும் அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும்படி சிறந்த விருந்தாக அமையும் என்று கூறுகின்றனர்.